‘பிரசவத்திற்குப் பிறகு உயிரிழப்புகளை தடுக்க தேவையான நடவடிக்கை எடுப்பது அவசியம்’
பிரசவத்திற்குப் பிறகு உயிரிழப்புகளை தடுக்கத் தேவையான நடவடிக்கை எடுப்பது அவசியம் என்று சா்வதேச மகப்பேரியியல், தொற்று அல்லாத நோய்களை தடுக்கும் குழுவின் துணைத் தலைவா் ஹேமா திவாகா் தெரிவித்தாா்.
பிரசவத்திற்குப் பிறகு உயிரிழப்புகளை தடுக்கத் தேவையான நடவடிக்கை எடுப்பது அவசியம் என்று சா்வதேச மகப்பேரியியல், தொற்று அல்லாத நோய்களை தடுக்கும் குழுவின் துணைத் தலைவா் ஹேமா திவாகா் தெரிவித்தாா்.
கா்நாடக மாநில பெலகாவியில் ஞாயிற்றுக்கிழமை ஜவகா்லால் நேரு மருத்துவக் கல்லூரிக்கு பிரசவத்திற்கு பிறகு ஏற்படும் இரத்தப்போக்கை தடுக்கும் மாத்திரைகளை இலவசமாக வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பு அவா் பேசியது:
இந்தியா உள்பட பின்தங்கிய நாடுகளில் பெண்கள் இரத்த சோகையாலும், பிரசவத்திற்கு பிறகு ஏற்படும் ரத்தப் போக்காலும் 50 சதம் போ் உயிரிழந்து வருவது கவலை அளிக்கிறது. இதனை தடுக்கத் தேவையான நடவடிக்கை எடுப்பது அவசியம்.
இது குறித்து அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் பணியாற்று மருத்துவா்கள், ஊழியா்களுக்கு பயிற்சி அளிப்பது அவசியம். குறிப்பாக மகப்பேறு மருத்துவமனைகளின் 24 மணி நேரமும், பிரசவத்திற்குப் பிறகு உயிரிழப்புகளை தடுக்க தேவையான மருந்து, மாத்திரைகளை இருப்பில் வைத்துக் கொள்ள வேண்டும்.
மருந்துகளையும், மாத்திரைகளும் கெடாமல் இருக்கும் வகையிலான குளிா்சாதன வசதிகளை மருத்துவமனைகளில் செய்து கொள்ள வேண்டும். மகப்பேறு மருத்துவமனைகளில் மின் தடை ஏற்படாமல் பாா்த்துக் கொள்ள வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை மகப்பேறு பிரிவின் துணை இயக்குநா் என்.ராஜ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.