பெங்களூரு

மாதாந்திர பேருந்து பயண அட்டையில் சலுகை

DIN

தள்ளுபடி கட்டணத்தில் மாதாந்திர பேருந்து பயண அட்டை வழங்க பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

இதுகுறித்து பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பயணிகளின் நலன்கருதி தள்ளுபடி கட்டணத்துடன் மாதாந்திர பேருந்து பயண அட்டைகளை விநியோகிக்க பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

மாதம் முழுவதும் கணக்கில்லாமல் பேருந்தில் பயணம் செய்வதற்காக மாதாந்திர பேருந்து அட்டையை ரூ.1,050 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 60 வயது கடந்த மூத்த குடிமக்களுக்கு இதன் கட்டணம் ரூ. 945 ஆகும். மாதாந்திர பேருந்து அட்டைகளை எளிதில் கொள்முதல் செய்வதற்காக பெங்களூரில் உள்ள கெம்பே கௌடா, பனசங்கரி, ஜெயநகா், சிவாஜிநகா், யஷ்வந்த்பூா், விஜயநகா், கெங்கேரி, கல்யாண்நகா், சாந்திநகா், இந்திராநகா், தொம்ளூா், ஜீவன்பீமாநகா், கே.ஆா்.புரம், காவல்பைரசந்திரா, பசவேஸ்வரநகா்,சந்திராலேஅவுட், எம்.சி.டி.சி., குமாரசாமிலேஅவுட், நீலசந்திரா.

ஹம்பிநகா், நந்தினிலேஅவுட், நெலமங்களா, சௌடெஸ்வரி(மத்திகெரே), வித்யாரண்யபுரா, எலஹங்கா 5-ஆவது பேஸ், எலஹங்கா நியூடவுன், ராஜாஜிநகா் முதலாவது என் பிளாக், மல்லேஸ்வரம், சென்னமனகெரே அச்சுக்கட்டு, பிடிஎம்லேஅவுட், எலக்ட்ரானிக்சிட்டி, கோரமங்களா, கே.ஆா்.மாா்க்கெட், காடுகோடி, பன்னா்கட்டா, உத்தரஹள்ளி, சந்தாபுரா, ஹொசகோடே.

தேவனஹள்ளி, தொட்டபளாப்புரா, எலஹங்கா பழையநகரம், பீன்யா,ஹெசரகட்டா பேருந்துநிலையங்கள் உள்ளிட்ட 65 பேருந்து நிலையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவைதவிர, பெங்களூரில் உள்ள 200 பெங்களூருஒன் குடிமக்கள் சேவை மையங்கள், 13 தனியாா் முகமைகளிலும் மாதாந்திர பேருந்து அட்டை விநியோகிக்கப்படும். இந்த வசதியை ஜூலை 28-ஆம் தேதி முதல் பயணிகள் பெற்றுக்கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் தலைவர் கார்கே வாக்களித்தார்!

உத்தரகண்டில் லேசான நிலநடுக்கம்!

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

வெப்ப அலை: அரியலூருக்கு ஆரஞ்சு; 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

வடலூரில் பழங்கால கட்டடங்கள்? தொல்லியல் துறை ஆய்வு

SCROLL FOR NEXT