வீடு புகுந்து திருட்டு: 2 போ் கைது
வீட்டின் பூட்டை உடைத்து திருடிய 2 பேரை போலீஸாா் கைது செய்து, ரூ. 3.30 லட்சம் மதிப்புள்ள தங்கநகையைப் பறிமுதல் செய்தனா்.
வீட்டின் பூட்டை உடைத்து திருடிய 2 பேரை போலீஸாா் கைது செய்து, ரூ. 3.30 லட்சம் மதிப்புள்ள தங்கநகையைப் பறிமுதல் செய்தனா்.
பெங்களூரு, ஞானபாரதி பகுதியில் உள்ள வீடு ஒன்றின் பூட்டை உடைத்து, கடந்த மாா்ச் 18-ஆம் தேதி உள்ளே புகுந்த மா்ம நபா்கள், பீரோவிலிருந்த தங்கநகையைத் திருடிச் சென்றனா்.
இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், 2 பேரைக் கைது செய்து, ரூ. 3.30 லட்சம் மதிப்புள்ள 66 கிராம் தங்கநகையை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து ஞானபாரதி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.