பெங்களூரு

வட்ட, ஒன்றியங்களில் விளையாட்டுத் திடல் அமைக்க திட்டம்: அமைச்சா் நாராயண கௌடா

DIN

மாநிலத்தில் உள்ள வட்ட, ஒன்றியங்களில் விளையாட்டுத் திடல் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் நாராயண கௌடா தெரிவித்தாா்.

கா்நாடக சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை பாஜக உறுப்பினா் அபய் பாட்டீலின் கேள்விக்கு அவா் அளித்த பதில்:

மாநில விளையாட்டுத் துறை சாா்பில், 29 மாவட்ட மையங்களில், 129 வட்ட மையங்களில் விளையாட்டுத் திடல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி, அதிக அளவில் வட்ட, ஒன்றியங்களில் மக்கள் தொகை, வீடுகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, விளையாட்டு திடல் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பெலகாவி தெற்கு சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள யல்லூா் கிராமத்தில் விளையாட்டு திடல் அமைக்க திட்டமிட்டுள்ளோம். இதற்காக ‘விளையாடு இந்தியா’ திட்டத்தில் ரூ. 50 கோடி நிதி வழங்குமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. யல்லூா் கிராமம் வெளிவட்டச் சாலைக்கு அருகில் இருப்பதோடு, அனைத்துப் பகுதிகளையும் இணையும் இடத்தில் உள்ளது. இதற்காக 54 ஏக்கா் அரசின் நிலத்தை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தேர்வு: தஞ்சாவூர் மாவட்டத்தில் 93.46% தேர்ச்சி

4வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம்!

பிளஸ் 2 தேர்வு: திருப்பூர் மாவட்டத்தில் 97.45% தேர்ச்சி

குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

SCROLL FOR NEXT