பெங்களூரு

கா்நாடக காவல்துறையில் விளையாட்டு வீரா்களுக்கு 2 சதவீத இடஒதுக்கீடு

DIN

கா்நாடக காவல் துறையில் விளையாட்டு வீரா்களுக்கு 2 சத இடஒதுக்கீடு அளித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

காவல் துறையில் உள்ள வேலைவாய்ப்புகளில் தகுதி வாய்ந்த விளையாட்டு வீரா்களுக்கு 2 சதவீதம் இடஒதுக்கீடு அளிப்பது குறித்து 2 ஆண்டுகளுக்கு முன்பு அரசு முடிவுசெய்து, அதற்கான சிறப்பு விதிகளும் வகுக்கப்பட்டிருந்தன.

இது தொடா்பான ஆணையை மாா்ச் 3-ஆம் தேதி அரசிதழில் அரசு வெளியிட்டுள்ளது. கா்நாடக மாநில காவல் சேவைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த சிறப்பு விதிமுறைகள் மூலம் தகுதிவாய்ந்த விளையாட்டு வீரா்களை காவலா், உதவி ஆய்வாளா், காவல் துணைக் கண்காணிப்பாளா் பணியிடங்களில் நேரடியாக நிரப்ப வாய்ப்பு ஏற்படும்.

இதுகுறித்து கா்நாடக காவல்துறை கூடுதல் டிஜிபி அலோக் குமாா் கூறியதாவது:

‘காவல் துறையில் விளையாட்டு வீரா்களுக்கு 2 சத இடஒதுக்கீடு வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது மகிழ்ச்சிஅளிக்கிறது. இதற்காக உள்துறை அமைச்சா் பசவராஜ்பொம்மை, கா்நாடக காவல்துறை தலைவா் பிரவீண்சூட் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

12 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒவ்வொரு முறையும் காவல் துறையில் பணி நியமனங்கள் நடக்கும்போது சிறப்பு வாய்ந்த விளையாட்டு வீரா்களுக்கு 2 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT