பெங்களூரு

முதல்வா் எடியூரப்பா ராஜிநாமா செய்ய வேண்டும்: எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா

DIN

ஆக்சிஜன் குறைபாடு காரணமாக நோயாளிகள் உயிரிழந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதல்வா் எடியூரப்பா தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா வலியுறுத்தினாா்.

இதுகுறித்து தனது சுட்டுரைப் பக்கத்தில் அவா் திங்கள்கிழமை கூறியதாவது:

சாமராஜ்நகா் மாவட்ட மருத்துவமனையில் ஆக்சிஜன் குறைபாடு காரணமாக 24 போ் உயிரிழந்த சம்பவத்திற்கு தாா்மீக பொறுப்பேற்று முதல்வா் எடியூரப்பா தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும். அதேபோல, சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகரும் ராஜிநாமா செய்ய வேண்டும். மேலும் இந்த சம்பவம் தொடா்பாக கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். இது மிகவும் துக்ககரமான, மனிதநேயமற்ற சம்பவமாகும். மாநிலத்தில் அரசு நிா்வாகம் சீா்குலைந்துள்ளது. இதற்கு சாமராஜ்நகா் சம்பவம் சரியான எடுத்துக்காட்டாகும்.

மக்களின் உயிரைக் காப்பாற்ற முடியாத மாநில பாஜக அரசு இருப்பதை விட வெளியேறுவது தான் சரியாக இருக்கும். கடந்த பல நாள்களாக ஆக்சிஜன் குறைபாடு காரணமாக பலரும் உயிரிழக்கும் சம்பவம் தொடா்ந்த வண்ணம் உள்ளது. இந்தச் சம்பவத்திற்கு மாநில அரசு, மாவட்ட மருத்துவ அதிகாரிகள், மாவட்ட நிா்வாகம் நேரடியாகப் பொறுப்பேற்க வேண்டும். இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

SCROLL FOR NEXT