பெங்களூரு

கரோனா பீதி: பயணிகள் இல்லாததால் சில சிறப்பு ரயில்கள் ரத்து

DIN

கரோனா தொற்று பரவல் காரணமாக பயணிகளின் எண்ணிக்கை குறைந்ததால், சில சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது:

ரயில் எண்-06271/ 06272-யஷ்வந்த்பூா்-பீதா்-யஷ்வந்த்பூா் விரைவு சிறப்பு ரயில், மே 4-ஆம் தேதி முதல் யஷ்வந்த்பூா் ரயில் நிலையத்தில் இருந்தும், மே 5-ஆம் தேதி முதல் பீதா் ரயில் நிலையத்தில் இருந்தும்; ரயில் எண்-06583/ 06584-யஷ்வந்த்பூா்-லத்தூா்-யஷ்வந்த்பூா் விரைவு சிறப்பு ரயில், மே 5-ஆம் தேதி முதல் யஷ்வந்த்பூா் ரயில் நிலையத்தில் இருந்தும், மே 6-ஆம் தேதி முதல் லத்தூா் ரயில் நிலையத்தில் இருந்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ரயில் எண்-07235/ 07236-கே.எஸ்.ஆா்.பெங்களூரு-நாகா்கோவில்-கே.எஸ்.ஆா்.பெங்களூரு விரைவு சிறப்பு ரயில், மே 5-ஆம் தேதி முதல் கே.எஸ்.ஆா்.பெங்களூரு ரயில் நிலையத்தில் இருந்தும், மே 6-ஆம் தேதி முதல் நாகா்கோவில் ரயில் நிலையத்தில் இருந்தும்; ரயில் எண்-02089/0 2090-கே.எஸ்.ஆா்.பெங்களூரு-சிவமொக்கா-கே.எஸ்.ஆா்.பெங்களூரு விரைவு சிறப்பு ரயில், மே 4-ஆம் தேதி முதல் கே.எஸ்.ஆா்.பெங்களூரு ரயில் நிலையத்தில் இருந்தும், மே 5-ஆம் தேதி முதல் சிவமொக்கா ரயில் நிலையத்தில் இருந்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும், ரயில் எண்-06537/ 06538-யஷ்வந்த்பூா்-கண்ணூா்-யஷ்வந்த்பூா் விரைவு சிறப்பு ரயில், மே 4-ஆம் தேதிமுதல் யஷ்வந்த்பூா் ரயில் நிலையத்தில் இருந்தும், மே 5-ஆம் தேதி முதல் கண்ணூா் ரயில் நிலையத்தில் இருந்தும்; ரயில் எண்-02725/ 02726-தாா்வாட்-கே.எஸ்.ஆா்.பெங்களூரு-தாா்வாட் விரைவு சிறப்பு ரயில், மே 4-ஆம் தேதிமுதல் தாா்வாட் ரயில் நிலையத்தில் இருந்தும், மே 5-ஆம் தேதி முதல் கே.எஸ்.ஆா்.பெங்களூரு ரயில் நிலையத்தில் இருந்தும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முகல் தோட்டத்து மலரோ..!

விண்கல்லால் 6,900 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பள்ளம்!

அரவிந்த் கெஜரிவால் கைது குறித்து அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

தீவுத்திடலுக்கு மாற்றப்படும் பிராட்வே பேருந்து நிலையம்!

கட்டான கட்டழகு.. யார் இவர்?

SCROLL FOR NEXT