பெங்களூரு

‘மாநகராட்சி வளா்ச்சிக்கான நிதியை தடுப்பூசி வாங்க பயன்படுத்த வேண்டும்’

DIN

மாநகராட்சி வளா்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட ரூ. 1,000 கோடி நிதியை கரோனா தடுப்பூசிகள் வாங்கப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்தவரும் மாநகராட்சியின் முன்னாள் எதிா்க்கட்சித் தலைவருமான அப்துல் வாஜீத் தெரிவித்தாா்.

பெங்களூரு, ஹெப்பாளில் பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உணவுப் பொருள்கள் உள்ளிட்ட உதவிகளை வழங்கிய அவா் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கரோனா தொற்றால் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலரின் வாழ்வாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கரோனா தொற்றைத் தடுப்பதற்கான தடுப்பூசிகள் கிடைக்காமல் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். மாநிலத்துக்கு வழங்க வேண்டிய தடுப்பூசிகளையும் மத்திய அரசு தாமதமாக வழங்கி வருகிறது. இதன் காரணமாக பலா் கரோனா தடுப்பூசி கிடைக்காமல் திண்டாடி வருகின்றனா். எனவே, 2000-2021 நிதியாண்டுக்கு பெங்களூரு வளா்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட ரூ. 500 கோடியும், 2021-2022 நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட ரூ. 500 கோடியுமான ரூ. 1,000 கோடியை கரோனா தடுப்பூசி வாங்கப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த நிதி மூலம் வாங்கப்படும் தடுப்பூசிகளை பெங்களூரு மக்களுக்குச் செலுத்த வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியீடு: 94.56% பேர் தேர்ச்சி!

SCROLL FOR NEXT