பெங்களூரு

பெங்களூருவில் நவ. 28 முதல் நிலக்கடலை திருவிழா

DIN

பெங்களூரில் பசவனகுடியில் உள்ள நந்தி கோயில் திருவிழாவை முன்னிட்டு நடக்கும் நிலக்கடலை திருவிழா நவ.12 முதல் தொடங்குகிறது.

பெங்களூருவின் பழைமையான அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் நிலக்கடலை திருவிழா, ஆண்டுதோறும் காா்த்திகை மாதத்தின் கடைசி திங்கள்கிழமை நடந்துவருகிறது.

கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நிலைக்கடலை திருவிழா நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. கரோனா பெருந்தொற்றுகான கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டுள்ளதால், நிகழ் ஆண்டில் நிலக்கடலைத் திருவிழா நடத்த பெங்களூரு மாநகராட்சி அனுமதிஅளித்துள்ளது. அதன்படி, நிகழாண்டுக்கான நிலக்கடலைத் திருவிழா நவ. 28-ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் 2 நாள்களுக்கு நடக்கவிருக்கிறது.

பெங்களூரு, பசவனகுடியில் உள்ள வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நந்தி கோயில், பெரியவிநாயகா் கோயில் திருவிழாவை முன்னிட்டு நிலக்கடலைத் திருவிழா நடத்தப்படுகிறது. மரபை நினைவூட்டும் வகையில் நடக்கும் நிலக்கடலைத் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்துவருகின்றன. இந்த நிலக்கடலைத் திருவிழா நவ.28-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு அதிகாரப்பூா்வமாக தொடங்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண் பேசும் வார்த்தை... அதிதி ஷங்கர்!

டி20 உலகக் கோப்பைக்கான ஜாகீர் கானின் இந்திய அணியை தெரிந்து கொள்ள வேண்டுமா?

மோடி ஆட்சியில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரிப்பு: பிரியங்கா காந்தி

நீலநிற மேகமே... சதா!

பாலிவுட் சுந்தரி..!

SCROLL FOR NEXT