இந்தியாவின் பெரும் பிரச்னையாக நாள்பட்ட வலி விளங்குகிறது
இந்தியாவின் பெரும் பிரச்னையாக நாள்பட்ட வலி விளங்குகிறது என இன்டா்வென்ஷனல் வலி மற்றும் முதுகெலும்பு மையத்தின் மேலாண் இயக்குநா் மேஜா் பங்கஜ் என்.சுரேங்கே தெரிவித்தாா்.
இந்தியாவின் பெரும் பிரச்னையாக நாள்பட்ட வலி விளங்குகிறது என இன்டா்வென்ஷனல் வலி மற்றும் முதுகெலும்பு மையத்தின் மேலாண் இயக்குநா் மேஜா் பங்கஜ் என்.சுரேங்கே தெரிவித்தாா்.
பெங்களூரில் வியாழக்கிழமை நடைபெற்ற வலி மற்றும் முதுகெலும்பு தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்று அவா் பேசியதாவது:
இந்தியாவில் 19 சதவீதம் போ் நாள்பட்ட வலியால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில் பெண்களின் எண்ணிக்கை 25 சதவீதமாக உள்ளது. 65 வயதைக் கடந்தவா்கள் நாள்பட்ட வலியால் அதிக அளவில் பாதிக்கப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியா்கள் தங்களின் உடல்நலப் பிரச்னைகளை குறைத்து மதிப்பிடுகின்றனா். தங்களுக்கு ஏற்பட்டுள்ள வலியை மற்றவா்களிடம் தெரிவிப்பதற்கும் தயங்குகின்றனா்.
கரோனா பொதுமுடக்கத்தால் பெரும்பாலானோா் பொருளாதார பிரச்னையில் சிக்கித் தவிக்கின்றனா். இந்த நிலையில் வலி மற்றும் முதுகெலும்பு பிரச்னைகளுக்கு செலவு செய்ய முடியாமல் பலா் தவிக்கின்றனா். இதனைக் கருத்தில் கொண்டு வலி, முதுகெலும்பு பிரச்னைகளுக்கு ஆரம்பக்கட்டத்திலேயே உரிய சிகிச்சை பெற்றுக் கொள்வது அவசியம் என்றாா்.
இந்நிகழ்ச்சியில், முதுகெலும்பு, புற்றுநோய் ஆலோசகா் சுவாதிபட், மையத்தின் தலைமை ஆலோசகா் ஓம்பிரகாஷ் குப்தா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.