முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

புதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து...

Updated On : 22 மார்ச், 2026 at 9:36 AM
எடப்பாடி பழனிசாமி - கோப்புப் படம்
பகிர்:

புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் அதிமுக போட்டிடும் 2 இடங்களின் வேட்பாளர்களை அந்தக் கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரியில் வருகிற ஏப்ரல் 9 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 16 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் வேட்புமனு தாக்கல் செய்ய மார்ச் 23 கடைசி நாளாகும்.

புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 30 சட்டப்பேரவைத் தொகுதிகளில் என். ஆர். காங்கிரஸ் கட்சிக்கு 16 தொகுதிகள் ஒதுக்கப்படுகின்றன.

14 தொகுதிகள் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து அதிமுகவுக்கும் புதிதாக கூட்டணிக்கு வந்துள்ள லட்சிய ஜனநாயகக் கட்சிக்கும் தொகுதிகளைப் பிரித்துக் கொடுக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

உப்பளம் மற்றும் உருளையன்பேட்டை ஆகிய இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அதிமுக போட்டியிடுகிறது. இந்த இரண்டு தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை பொதுச் செயலர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக இபிஎஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, நடைபெற உள்ள புதுச்சேரி சட்டமன்றப் பொதுத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

உப்பளம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஏ. அன்பழகன், உருளையன்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஏ. காந்தி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

summary

AIADMK General Secretary Edappadi K. Palaniswami has announced the candidates for the two seats that the party will contest on behalf of the National Democratic Alliance in Puducherry.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.