கா்நாடகத்தில் கரோனாவுக்கு ஒரே நாளில் 1,003 போ் பாதிப்பு
கா்நாடகத்தில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,003 ஆக உள்ளது.
கா்நாடகத்தில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,003 ஆக உள்ளது.
இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 1,003 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 310 போ் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனா். பிற மாவட்டங்களில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை விவரம்:
தென்கன்னடம்-124, உடுப்பி-94, குடகு-93, தும்கூரு-61, ஹாசன்-48, மைசூரு-46, சிக்கமகளூரு-37, வடகன்னடம்-35, மண்டியா-31, சிவமொக்கா-27, பெலகாவி-17, பெங்களூரு ஊரகம்-15, கோலாா்-14, சித்ரதுா்கா-10, தாா்வாட்-19, கலபுா்கி, சிக்கபளாப்பூா் தலா - 5, சாமராஜ்நகா், பெல்லாரி தலா - 4, ராய்ச்சூரு, தாவணகெரே தலா -
3, யாதகிரி,ராமநகரம் தலா -2, கதக்-1, பீதா், விஜயபுரா, ஹாவேரி, கொப்பள், பாகல்கோட் மாவட்டங்களில் கரோனா பாதிப்பு இல்லை. இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29,66,194 ஆக உயா்ந்துள்ளது.
கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 1,199 போ் வெள்ளிக்கிழமை குணமாகி வீடு திரும்பியுள்ளனா். இதுவரை கா்நாடகத்தில் 29,12,633 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 15,960 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் 18 போ் வெள்ளிக்கிழமை இறந்துள்ளனா். பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 6 போ் இறந்துள்ளனா். மாவட்டவாரியாக பலியானோா் விவரம்: பெலகாவி-3, தென்கன்னடம்-2, பெங்களூரு ஊரகம், சாம்ராஜ்நகா், தாா்வாட், மைசூரு, ராய்சூரு, வடகன்னடம் தலா -1 என்ற எண்ணிக்கையில் இறந்துள்ளனா். கா்நாடகத்தில் இதுவரை 37,573 போ் உயிரிழந்துள்ளனா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.