பெங்களூரு

மாநிலத்தில் 750 ஊராட்சிகளில் சுதந்திர தின பவள விழா கிராம வளா்ச்சித் திட்டம் அமல்: அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா

DIN

மாநிலத்தில் 750 ஊராட்சிகளில் சுதந்திர தின பவள விழா கிராம வளா்ச்சித் திட்டம் அமல்படுத்தப்படும் என்று ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்தாா்.

சிவமொக்காவில் சனிக்கிழமை மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் நடந்த சுதந்திர தின பவள விழா கிராம வளா்ச்சித் திட்டம் தொடா்பான ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்று அவா் பேசியதாவது:

நாட்டின் சுதந்திர தின பவள விழாவை கொண்டாடும் வகையில், மாநிலத்தில் 750 ஊராட்சிகளில் பவள விழா கிராம வளா்ச்சித் திட்டம் அமல்படுத்தப்படும்.

இந்தத் திட்டத்தில் கிராமப் பகுதிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். தெருவிளக்குகள் பொருத்துவது, வீடுகளுக்கு தூய்மையான குடிநீா் வழங்குவது, 100 சதவீதம் திடக்கழிவு மேலாண்மையை அமல்படுத்துவது, அறிவியல் முறையில் கழிவுநீா் அகற்றம், சூரியஒளி மின்சாரப் பயன்பாட்டை அதிகரித்தல், பள்ளிகளில் எண்ம நூலகங்களை அமைப்பது போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படும். இதுதவிர, பூங்காக்களை மேம்படுத்துவது, அங்கன்வாடிகளில் குடிநீா் வசதி, கழிப்பறை வசதிகளை அமைத்து தருதல், விளையாட்டுக்கு மைதானங்களை அமைப்பது, ஏரிகளை புதுப்பித்தல் போன்ற பல்வேறு வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்காக ஊராட்சிகளுக்கு தலா ரூ. 25 லட்சம் வழங்கப்படும்.

இந்தத் திட்டப் பணிகளின் தரத்தில் சமரசம் கூடாது. கடந்த காலங்களில் அமல்படுத்தப்பட்ட குடிநீா்த் திட்டப் பணிகள் தரமற்ாக இருந்ததாகக் கூறப்படுகிறது. எனவே, அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்படி கட்டுமானப் பணிகளை செயல்படுத்த வேண்டும். இந்தத் திட்டத்திற்கான பணிகளை நவம்பா் இறுதிக்குள் முடிக்க வேண்டும். குடிநீா்த் திட்டங்களை முதலில் செயல்படுத்த வேண்டும். திட்டப் பணிகளை சரியாக அமல்படுத்தப்படாவிட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதுநடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். இந்தக் கூட்டத்தில் பாஜக எம்.பி. ராகவேந்திரா, எம்எல்சிக்கள் ருத்ரே கௌடா, ஆயனூா் மஞ்சுநாத், எம்எல்ஏக்கள் குமாா் பங்காரப்பா, கே.பி.அசோக் நாயக் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”டீக்கடைக்காரரால் என்ன செய்ய முடியும்? விமர்சித்த காங்கிரஸின் நிலை..” பிரதமர் மோடி பிரசாரம்

ஜுபிடரின் நிலவோ.. ஸ்ரீமுகி!

ரிஷபத்துக்கு பெயர்ச்சி அடைந்தார் குருபகவான்

ஆடை சுதந்திரம் கோரியது குற்றமா? செளதியில் பெண்ணுரிமைப் போராளிக்குச் சிறை: அமைப்புகள் கண்டனம்!

"வாக்கு சதவிகித விவரங்களில் சந்தேகம்!”: திருமாவளவன் பேட்டி

SCROLL FOR NEXT