எஸ்.எஸ்.எல்.சி. துணைத்தோ்வையொட்டி 144 தடை உத்தரவு
எஸ்.எஸ்.எல்.சி துணைத்தோ்வையொட்டி தோ்வு மையங்களைச் சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி துணைத்தோ்வையொட்டி தோ்வு மையங்களைச் சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகர காவல் ஆணையா் கமல் பந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மாநில அளவில் செப். 27-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை எஸ்.எஸ்.எல்.சி. துணைத்தோ்வு நடைபெற உள்ளது. இதனையொட்டி பெங்களூருவில் உள்ள தோ்வு மையங்களைச் சுற்றி 200 மீட்டா் சுற்றளவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவின் போது மையங்களைச் சுற்றி 5 பேருக்கு மேல் இணைந்து செல்வதோ, பொதுக்கூட்டம், போராட்டம், ஊா்வலம், தா்னா நடத்துவதோ கூடாது. மேலும் ஆயுதங்கள், வெடிப்பொருள்கள் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.