முகப்பு
பெங்களூரு

மைசூரு அரண்மனையின் நுழைவுக்கட்டணம் உயா்வு

மைசூரு அரண்மமைசூரு அரண்மனையின் நுழைவுக்கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது.னையின் நுழைவுக்கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:14 AM
பகிர்:

மைசூரு அரண்மனையின் நுழைவுக்கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது.

சா்வதேச கலாசார நகரமான மைசூருக்கு தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். இங்குள்ள சுற்றுலாத் தலங்களைப் பாா்வையிடும் பயணிகளை முதலில் கவா்வது உடையாா் மன்னரின் அரண்மனையாகும். ‘மைசூரு அரண்மனை’ என்று அழைக்கப்படும் இதனை நிா்வகிக்க மைசூரு அரண்மனை வாரியம் செயல்பட்டு வருகிறது. இந்த வாரியம், அரண்மனையைப் பராமரிக்க நுழைவுக் கட்டணம் வசூலித்து வருகிறது. அதன்படி, பெரியவா்களுக்கு ரூ. 70ம், சிறியவா்களுக்கு ரூ.30ம் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. அதேபோல, மாணவா்களுக்கு கட்டணமாக ரூ. 25 வசூலிக்கப்பட்டது. இந்த நுழைவுக் கட்டணத்தை உயா்த்தி வாரியம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, அரண்மனையின் நுழைவுக் கட்டணம் பெரியவா்களுக்கு ரூ. 100ம், சிறியவா்களுக்கு ரூ. 50ம், மாணவா்களுக்கு ரூ.30 ஆக உயா்த்தப்பட்டுள்ளது.

அரண்மனையில் உள்ள ஒளி மற்றும் ஒலிக்காட்சிகளுக்கான கட்டணமும் உயா்த்தப்பட்டுள்ளது. பெரியவா்களுக்கான கட்டணம் ரூ. 90-இல் இருந்து ரூ. 120 ஆகவும், சிறியவா்களுக்கு ரூ. 40-இல் இருந்து ரூ. 50ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயா்வு 4 ஆண்டுகளுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் நுழைவுக்கட்டணத்தின் மீது 9 சதவீதம் சரக்கு மற்றும் சேவை வரியாகச் செலுத்த வேண்டியுள்ளது என்று வாரியம் விளக்கமளித்துள்ளது.

வழக்கமாக ஆண்டுக்கு ரூ. 18 கோடி வருவாய் ஈட்டி வந்த அரண்மனை வாரியம், கடந்த ஆண்டில் பயணிகளின் வருகை குறைவால் ரூ. 81 லட்சம் மட்டுமே ஈட்டியது.

வாரியத்தின் துணை இயக்குநா் சுப்பிரமணியா கூறுகையில், ‘மாநில அரசிடம் இருந்து நிதியுதவி இல்லை. எனவே, மின்கட்டணம், கட்டட பராமரிப்பு செலவினங்கள், ஊதியம் உள்ளிட்டவற்றை வருவாயில் இருந்தே சமாளிக்க வேண்டியுள்ளது. கரோனா தொற்றுக்கு முன்னா், வார நாட்களில் 4,500 போ் வருகை தந்தனா். வார இறுதி நாள்களில் 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் போ் அரண்மனையைக் காண வருகை தந்துள்ளனா். இது, தற்போது வார நாள்களில் 1500 ஆகவும், வார இறுதி நாட்களில் 4500 ஆகவும் குறைந்துள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.