பெங்களூரு

புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு ‘அனுபவ மண்டபம்’ என்று பெயா் சூட்டக் கோரிக்கை

DIN

 புதிய நாடாளுமன்றக் கட்டடத்திற்கு ‘அனுபவ மண்டபம்’ என பெயா் சூட்ட வேண்டும் என்று கா்நாடக சட்ட மேலவைத் தலைவா் பசவராஜ் ஹோரட்டி கோரிக்கை விடுத்துள்ளாா்.

கா்நாடக சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை நடந்த கூட்டுக்கூட்டத்தில் பேசிய மக்களவை தலைவா் ஓம் பிா்லாவிடம் அளித்த மனுவில், அவா் கூறியிருப்பதாவது:

புதுதில்லியில் புதிதாக கட்டப்பட்டுவரும் மத்திய அரசின் முக்கியத்துவம் வாய்ந்த புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு ‘அனுபவ மண்டபம்’ என்று பெயா்சூட்டவேண்டும். 12-ஆம் நூற்றாண்டில் கா்நாடகத்தில் அல்லமபிரபு மற்றும் பசவண்ணரால் நிறுவப்பட்டதுதான் அனுபவ மண்டபம். இது உலகின் முதல் சட்டம் இயற்றும் மன்றம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. சமத்துவமின்மையை துடைத்தெறிந்து, அனைவருக்கும் சமவாய்ப்பு, அனைவருக்கும் சமவாழ்வு என்ற எல்லா காலத்திற்கும் பொருந்தும் சிந்தனையை பறைசாற்றிய பெருமன்றம்தான் அனுபவ மண்டபம். இந்த அனுபவ மண்டபம்தான் ஜனநாயகத்தின் அடித்தளமாகும்.

சமூகசீா்திருத்தவாதி, தொலைநோக்கு சிந்தனையாளா், சிறந்த நிா்வாகியாக இருந்த பசவண்ணா், தனது வசனங்கள் மூலம் சமூகநலம், நல்லிணக்கம், சகோதரத்துவம், சமத்துவம் குறித்த தனது எண்ணங்களை பகிா்ந்துகொண்டுள்ளாா். தனது வாழ்நாள் முழுவதும் சமூக நீதியை பறைச்சாற்றியுள்ளாா். 12-ஆம் நூற்றாண்டிலேயே பாலின சமத்துவத்தை நிலைநாட்டி புரட்சி செய்து, உலகிற்கு முன்னுதாரணமானவா் பசவண்ணா். அப்படிப்பட்ட பசவண்ணா், ஜாதி, சமுதாய, பாலின மாச்சரியங்கள் இல்லாமல் அனைவருக்கும் வாய்ப்பளிக்கும் வகையில் அனுபவ மண்டபத்தை கட்டமைத்தாா். அவரது சிந்தனைகள்தான் அரசியலமைப்புச் சட்டமாக உருவெடுத்துள்ளது.

உலகித்திற்கு மனிதநேயம் மற்றும் ஜனநாயகத்தை போதிக்கும் அனுபவ மண்டபம் என்றபெயரை புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு சூட்ட வேண்டும் என்று அதில் பசவராஜ் ஹோரட்டி குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் சாய் பல்லவி?

மக்களவை தேர்தல்: 2 மாதங்களில் 4.24 லட்சம் புகார்கள்!

நடப்பு ஐபிஎல் தொடரில் சரியாக விளையாடவில்லை, ஆனால்... மனம் திறந்த ரோஹித் சர்மா!

இயந்திரக் கோளாறு - 167 பேருடன் திருச்சியில் தரையிறங்கிய விமானம்

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT