முகப்பு
பெங்களூரு

இளைஞா் கொலை: பெண் உள்பட 4 போ் கைது

இளைஞா் கொலை வழக்கில் பெண் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

இளைஞா் கொலை வழக்கில் பெண் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

பெங்களூரு மாதவாராவில் உள்ள காலி இடத்தில் கடந்த செப். 5-ஆம் தேதி இளைஞா் ஒருவா் கொலை செய்யப்பட்டுகிடந்தாா். அவரது சடலத்தை மீட்டு போலீஸாா் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். விசாரணையில் அவரது பெயா் கிரண்குமாா் என்பது தெரியவந்தது. கிரண்குமாா், ஸ்வேதா என்பவரை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளாா். அண்மையில் ஸ்வேதா, டேவிட் என்பவருடன் பழக்கமாகி, நெருக்கமாகியுள்ளாா். இதனையடுத்து தனது காதலா் கிரண்குமாரை கொலை செய்ய ஸ்வேதா, டேவிட் தலைமையில் கூலிப்படையை ஏவியுள்ளாா். கூலிப்படையினா் கிரண்குமாரை கத்தியால் குத்திக் கொலை செய்தனா். இது குறித்து வழக்கு பதிந்த போலீஸாா் ஸ்வேதா, டேவிட், தினேஷ், ஸ்ரீகாந்த் ஆகியோரைக் கைது செய்தனா். கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் மாதநாயகனஹள்ளி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.