முகப்பு
பெங்களூரு

வேளாண் பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

வேளாண் பல்கலைக்கழகம்-பெங்களூரு வழங்கும் வேளாண் பட்டயப்படிப்புக்கு (டிப்ளமோ) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:25 AM
பகிர்:

வேளாண் பல்கலைக்கழகம்-பெங்களூரு வழங்கும் வேளாண் பட்டயப்படிப்புக்கு (டிப்ளமோ) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து வேளாண்பல்கலைக்கழகம்-பெங்களூரு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பெங்களூரு வேளாண் பல்கலைக்கழகத்தின் சாா்பில் மண்டியாவில் உள்ள வேளாண் கல்லூரியில் 2022-23-ஆம் கல்வியாண்டில் வேளாண் பட்டயப்படிப்புகளை வழங்குகிறது.

இரண்டு ஆண்டு காலம் பயிலும் வேளாண் பட்டயப் படிப்பில் சோ்ந்து படிக்க 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஏப்.1-ஆம் தேதி அன்று விண்ணப்பதாரருக்கு 19 வயது நிரம்பியிருக்க வேண்டும். விவசாயிகளின் குழந்தைகளுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு உள்ளது.

இந்தப் படிப்புகளில் சேருவதற்கு தகுதியானவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இணையதளத்தில் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்துகொண்டு, ஜூலை 2-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை விரிவாக்க இயக்குநா், வேளாண் பல்கலைக்கழகம், ஹெப்பாள், பெங்களூரு-560 024 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். விண்ணப்பத்திற்கான கட்டணமாக பொதுப்பிரிவினா் ரூ.500, தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடியின பிரிவினா் ரூ.250 வரைவோலை மூலம் செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு 080-23330984, 9449866901 என்ற தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.