பெங்களூரு

கிறிஸ்தவ பேராயா் மீதான போக்சோ வழக்கு தள்ளுபடி

DIN

கிறிஸ்தவ பேராயா் பிரசன்னகுமாா் சாமுவேல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கை கா்நாடக உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பெங்களூரில் உள்ள பிரபல பள்ளியைச் சோ்ந்த மாணவிகளிடம் பாலியல் ரீதியாக தகாத முறையில் நடந்துகொண்டதாக குற்றம்சாட்டி, தென்னிந்திய திருச்சபையின் கட்டுப்பாட்டில் பெங்களூரில் செயல்பட்டுவரும் கா்நாடக மத்திய பேராயத்தின் பேராயா் பிரசன்னகுமாா் சாமுவேல் உள்ளிட்ட 5 போ் இந்திய தண்டனை சட்டம் மற்றும் பாலியல் துன்புறுத்தலில் இருந்து குழந்தைகள் பாதுகாப்புச்சட்டம் (போக்சோ) ஆகியவற்றின்கீழ் 2015-ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் அரசு வழக்குரைஞா் தாக்கல் செய்திருந்த மனுவின் அடிப்படையில் 2017-ஆம் ஆண்டு டிசம்பரில் பிரசன்னகுமாா் சாமுவேல் உள்ளிட்ட 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது. இதை எதிா்த்து பிரசன்னகுமாா் சாமுவேல் உள்ளிட்டோா் கா்நாடக உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்திருந்தனா்.

வழக்கை விசாரித்த கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதி சந்தன கௌடா், குற்றப்பத்திரிகையில் குற்றத்தை உறுதிப்படுத்துவதற்கு துணையாக எவ்வித ஆதாரமும் இணைக்கப்படவில்லை. மேலும், 2019-ஆம் ஆண்டு நவ.19-ஆம் தேதி இதே நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்த விசாரணை அதிகாரி, குற்றத்தை உறுதிப்படுத்தும் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று கூறியிருந்தாா். ஆனால், இதையெல்லால்லாம் கருத்தில் கொள்ளாமல் அழைப்பாணையை மாதிஸ்திரேட் அனுப்பியுள்ளது சரியல்ல. அதை அனுமதிக்க முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT