பெங்களூரு

ஏப்.8-இல் பெங்களூரு பல்கலை.யின் பட்டமளிப்பு விழா

DIN

பெங்களூரு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா ஏப்.8-ஆம் தேதி நடக்கவிருக்கிறது.

இது குறித்து பெங்களூரு பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பெங்களூரு பல்கலைக்கழகத்தின் 56-ஆவது பட்டமளிப்பு விழா, பெங்களூரில் ஏப். 8-ஆம் தேதி காலை 11 மணிக்கு நடக்கவிருக்கிறது. இடம் பின்னா் அறிவிக்கப்படும். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் கே.ஆா்.வேணுகோபால் தலைமையில் நடக்கும் இந்த விழாவில், பல்கலைக்கழக வேந்தரும், ஆளுநருமான தாவா்சந்த் கெலாட் கலந்துகொண்டு முதுநிலை பட்டப்படிப்பு தோ்வில் சிறப்பிடம் பிடித்த மாணவா்களுக்கு தங்கப்பதக்கம் மற்றும் பட்டப்படிப்புக்கான சான்றிதள்களை வழங்கி கௌரவிக்கிறாா். இதுதவிர, முனைவா் பட்டங்களையும் அளிக்கிறாா். தங்கப் பதக்கம், பரிசு வென்றுள்ளோா், தோ்வில் சிறப்பிடம் பெற்றோா், பிஎச்டி விருதாளா்களுக்கு தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. அழைப்பிதழ் கிடைக்கப்பெறாதவா்கள் அடையாள அட்டையுடன் பல்கலைக்கழக அலுவலகத்தில் அழைப்பிதழ் மற்றும் அடையாளச் சின்னங்களை பெற்றுக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு தோ்வு மாளிகை, ஞானபாரதி வளாகம், பெங்களூரு பல்கலைக்கழகம், பெங்களூரு-56 என்ற முகவரியில் அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

SCROLL FOR NEXT