முகப்பு
பெங்களூரு

விமான நிலையத்தில் ரூ.43.69 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

மங்களூரு விமான நிலையத்தில் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட இருவேறு வழக்குகளில் ரூ.43.69 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்கவரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:11 AM
பகிர்:

மங்களூரு விமான நிலையத்தில் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட இருவேறு வழக்குகளில் ரூ.43.69 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்கவரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனா்.

துபையில் இருந்து வெள்ளிக்கிழமை மங்களூரு விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் ஒரு பயணி பேஸ்ட் வடிவத்தில் தங்கம் கடத்தியதை சோதனையின்போது சுங்க வரித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனா். அந்தபயணியிடம் இருந்து சட்டவிரோதமாக கடத்த முயன்ற 732 கிராம் கொண்ட 24 கேரட் தூய்மையான ரூ.37,69,800 மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பால்கிரீம் அடியில் 4 துண்டுகளாக வைத்து கடத்திய ரூ.6,00,181 மதிப்புள்ள தங்கம் பயணியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சுங்க வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.