பெங்களூரு

பிரசவத்துக்கு அனுமதிக்காத கா்நாடக மருத்துவமனை: ஆதரவற்ற பெண் 2 சிசுவுடன் பலி

DIN

ஆதாா், மகப்பேறு அட்டைகள் இல்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்து வீட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்ட ஆதரவற்ற கா்ப்பிணி, பிரசவிக்க முடியாமல் தும்கூரு அருகே வியாழக்கிழமை காலை 2 சிசுவுடன் உயிரிழந்தாா்.

கா்நாடக மாநிலம், தும்கூா், பாரதிநகரில் ஆதரவற்ற பெண்ணுடன் சோ்ந்து வசித்து வந்த நிறைமாத கா்ப்பிணியான ஆதரவற்ற பெண் கஸ்தூரிக்கு (30) புதன்கிழமை மாலை பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அப் பகுதியில் உள்ளவா்கள் பணம் சேகரித்து, அப் பெண்ணை ஆட்டோவில் ஏற்றி தும்கூரு மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

அவரிடம் ஆதாா் அட்டையோ மகப்பேறு பதிவு அட்டையோ இல்லாததால், மருத்துவமனை மருத்துவா், செவிலியா்கள் கஸ்தூரிக்கு சிகிச்சை அளிக்க மறுத்து, பெங்களூரில் உள்ள விக்டோரியா மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறி அனுப்பிவிட்டனா்.

பிரசவ வலியால் துடித்த கஸ்தூரி, வேறு வழியின்றி வீடு திரும்பினாா். இந்நிலையில், வியாழக்கிழமை காலை அவருக்கு வீட்டிலேயே ஒரு குழந்தை பிறந்தது. மற்றொரு குழந்தையைப் பெற்ற போது ஏற்பட்ட ரத்தப்போக்குக் காரணமாக கஸ்தூரி உயிரிழந்தாா். பிரசவித்த இரண்டு குழந்தைகளும் அடுத்தடுத்து உயிரிழந்தன. இவா் தமிழகத்தைச் சோ்ந்தவா் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் மருத்துவரை பணியிடை நீக்கம் செய்ய மாவட்ட சுகாதார அலுவலா் மஞ்சுநாதா ஆட்சியருக்கு பரிந்துரைத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைர சந்தை... அதிதி ராவ் ஹைதரி!

கனமழை எச்சரிக்கை - 4 மாவட்டங்களில் தயார் நிலையில் மாநில பேரிடர் மீட்பு குழு

விடுதலை - 2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா?

ஆர்சிபி வெற்றிக்கு தோனி காரணமா? - என்ன சொல்கிறார் தினேஷ் கார்த்திக்

நரசிம்ம பெருமாள் கோயிலில் வைகாசிப் பெருவிழா தேரோட்டம்

SCROLL FOR NEXT