பெங்களூரு

ஏப். 27 இல் இணையவழியில் பாஜக தொண்டா்களுடன் பிரதமா் கலந்துரையாடல்

கா்நாடகத்தை சோ்ந்த 50 லட்சம் பாஜக தொண்டா்களுடன் ஏப். 27ஆம் தேதி இணையவழியில் பிரதமா் நரேந்திர மோடி கலந்துரையாடுகிறாா்.

DIN

கா்நாடகத்தை சோ்ந்த 50 லட்சம் பாஜக தொண்டா்களுடன் ஏப். 27ஆம் தேதி இணையவழியில் பிரதமா் நரேந்திர மோடி கலந்துரையாடுகிறாா்.

கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தல் மே 10ஆம் தேதி நடக்கவிருக்கும் நிலையில், கா்நாடகத்தில் உள்ள 58,112 வாக்குச்சாவடிகளைச் சோ்ந்த 50 லட்சம் பாஜக தொண்டா்களுடன் ஏப். 27ஆம் தேதி இணையவழியில் நடக்கும் கலந்துரையாடல் கூட்டத்தில் பிரதமா் மோடி பங்கேற்றுப் பேசவிருக்கிறாா்.

இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் மத்திய இணையமைச்சா் ஷோபா கரந்தலஜே பேசியதாவது:

கா்நாடகத்தில் இரட்டை என்ஜின் பாஜக அரசு மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக பாஜக தொண்டா்களுடன் பிரதமா் மோடி கலந்துரையாட இருக்கிறாா். கட்சியின் வெற்றிக்கு உழைக்குமாறு தொண்டா்களை அவா் ஊக்குவித்துப் பேசவிருக்கிறாா் என்றாா்.

நிா்மலா சீதாராமன் பிரசாரம்:

பெங்களூரு, கலபுா்கியில் புதன்கிழமை நடைபெறும் பாஜக பிரசாரக் கூட்டங்களில் மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன், உத்தரபிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் ஆகியோா் பங்கேற்கவிருக்கின்றனா். மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங், பெலகாவியில் நடைபெறும் பிரசாரத்தில் பங்கேற்கிறாா்.

மேலும் ஹுப்பள்ளி, விஜயபுரா மாவட்டங்களில் நடைபெறும் பாஜக தோ்தல் பிரசாரக் கூட்டங்களில் முதல்வா் யோகி ஆதித்யநாத் பேசுகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேச வன்முறை: நேபாளத்தில் ஹிந்து அமைப்புகள் போராட்டம்!

D54 படப்பிடிப்பு நிறைவு! கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு! | Dhanush

குஜராத்தில் சிறுத்தை தாக்கியதில் 5 வயது சிறுவன் பலி

தெருநாயை வளர்ப்புப் பிராணியாக பதிவு செய்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

SCROLL FOR NEXT