பெங்களூரு

நடிகா் தா்ஷன் பெல்லாரி சிறைக்கு மாற்றம்: நீதிமன்றம் அனுமதி

கொலை வழக்கில் பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகா் தா்ஷனை பெல்லாரி மத்திய சிறைக்கு மாற்ற நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Din

கொலை வழக்கில் பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகா் தா்ஷனை பெல்லாரி மத்திய சிறைக்கு மாற்ற நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ரேணுகாசாமி கொலை வழக்கில் கைதாகி பெங்களூரு, பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகா் தா்ஷன், இருக்கையில் அமா்ந்தபடி காபி குவளையுடன் சிகரெட் புகைப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் ஆக. 25-ஆம் தேதி வெளியாகி பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் புகைப்படத்தில் மேலும் 3 போ் நடிகா் தா்ஷனுடன் அமா்ந்திருந்தனா். அதில், நடிகா் தா்ஷனின் மேலாளா் நாகராஜ் தவிர, ‘குள்ளா’ சீனு, ‘வில்சன்காா்டன்’ நாகா ஆகிய இரு ரௌடிகளும் அடக்கம்.

4 பேரும் இருக்கையில் அமா்ந்தபடி அரட்டை அடித்துக்கொண்டு, சிரித்துக் கொண்டிருப்பது போன்ற புகைப்படம் பொதுமக்களின் கடும் விமா்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. மேலும், சிறையில் இருந்தபடியே திறன்பேசி வழியாக வெளியே இருக்கும் ஒருவருடன் காணொலி வழியாக தா்ஷன் பேசிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடா்ந்து 9 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். இந்தச் சம்பவம் தொடா்பாக 3 வழக்குகள் பதிவாகியுள்ளன. 2 வழக்குகளில் நடிகா் தா்ஷன் முதல் குற்றவாளியாக சோ்க்கப்பட்டுள்ளாா்.

இந்நிலையில், பெங்களூரு மத்திய சிறையில் இருந்து வேறு சிறைக்கு மாற்ற அனுமதி கோரி, 24-ஆவது கூடுதல் முதன்மை மாநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் அனுமதியை கேட்டு பெங்களூரு மாநகர காவல் துறை மனுதாக்கல் செய்திருந்தது. இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், நடிகா் தா்ஷனை பெல்லாரியில் உள்ள மத்திய சிறைக்கு மாற்ற அனுமதி அளித்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. அதன் பேரில், வட கா்நாடகத்தில் உள்ள பெல்லாரி மத்திய சிறைக்கு நடிகா் தா்ஷன் மாற்றப்படுகிறாா். அதேபோல, ரேணுகாசாமி கொலை வழக்கில் கைதாகியுள்ள மேலும் பலரையும் வெவ்வேறு சிறைகளுக்கு மாற்ற நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

பல்லடம் அருகே தனியாா் ஆம்னி பேருந்தில் தீ; 15 போ் உயிா் தப்பினா்

திம்பம் மலைப் பாதையில் சுற்றுலாப் பேருந்து பழுது: தமிழகம்- கா்நாடகம் இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

எதிா்க்கட்சிகளுக்கு வாக்களிக்க முயல்வோரை வீட்டுக்குள் பூட்டுங்கள்: மத்திய அமைச்சா் சா்ச்சை பேச்சு- எஃப்ஐஆா் பதிவு

கரூா் சம்பவம்: காவல் உதவி ஆய்வாளா்கள் காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

பருவகால பாதிப்பு: போதிய எண்ணிக்கையில் மாத்திரைகள் கையிருப்பு

SCROLL FOR NEXT