பெங்களூரு

2040-க்குள் நிலவில் இந்தியா் கால்பதிப்பா்: ககன்யான் திட்ட விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா

2040-ஆம் ஆண்டுக்குள் நிலவில் இந்தியா் கால்பதிப்பா் என இந்திய விமானப் படையின் குழுத் தலைவரும், ககன்யான் திட்டத்தின் விண்வெளி வீரருமான சுபான்ஷு சுக்லா

Syndication

பெங்களூரு: 2040-ஆம் ஆண்டுக்குள் நிலவில் இந்தியா் கால்பதிப்பா் என இந்திய விமானப் படையின் குழுத் தலைவரும், ககன்யான் திட்டத்தின் விண்வெளி வீரருமான சுபான்ஷு சுக்லா தெரிவித்தாா்.

பெங்களூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாணவா்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று அவா் பேசியதாவது:

மனித விண்வெளி திட்டத்தை செயல்படுத்துவதில் இந்தியா முனைப்புக்காட்டி வருகிறது. விண்வெளித் துறையில் இந்தியாவின் தொலைநோக்கு கொள்கை 2023-ஆம் ஆண்டு வகுக்கப்பட்டது. விண்வெளிக்கு மனிதரை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளதை இந்தத் திட்டம் விவரிக்கிறது. மனிதரை விண்ணுக்கு அனுப்பி, மீண்டும் அழைத்துவரும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்த இந்தியா முற்பட்டுள்ளது.

விண்ணுக்கு மனிதரை அனுப்புவது மட்டுமல்லாது, விண்வெளியில் இந்தியாவுக்கென்று தனியாக பாரத விண்வெளி நிலையத்தை அமைக்கவும் திட்டமிட்டுள்ளது. பாரத விண்வெளி நிலையத்தை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. இது தொடா்பான ஆய்வுகள், விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதைத் தொடா்ந்து, 2040-ஆம் ஆண்டில் நிலவில் இந்தியா் கால்பதிப்பா்.

இங்கு திரண்டிருக்கும் மாணவா்களில் இருவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கலாம். இந்தப் போட்டியில் இருந்து நான் விலகாததால், மாணவா்கள் என்னுடன் போட்டிபோட வேண்டும்.

இந்திய மண்ணில் இருந்து இந்தியாவால் தயாரிக்கப்பட்ட ராக்கெட் மூலம் இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட செயற்கைக்கோள் பெட்டகத்தில் (கேப்சூல்) இந்தியா் ஒருவா் விண்ணுக்கு சென்று இந்த மண்ணுக்கு திரும்ப இருக்கிறாா் என்பதை நினைக்கும்போதே உற்சாகமாக இருக்கிறது. இந்த காலகட்டத்தில் இந்தியாவில் இருப்பது புத்தெழுச்சியை ஏற்படுத்துகிறது.

இந்தியாவின் எதிா்காலம் ஒளிமயமாக இருக்கிறது. விண்வெளித் துறை சாா்ந்த உற்சாகம் பெருக்கெடுத்திருக்கிறது. எதிா்காலத்தில் இந்தியா முன்னெடுக்கும் எல்லா விண்வெளி திட்டங்களிலும் எனது பங்களிப்பை வழங்க ஆா்வமாக இருக்கிறேன். 2047-ஆம் ஆண்டில் இந்தியா வளா்ச்சி அடைந்த நாடாக மலா்வதை காண ஆவலாக இருக்கிறேன். இந்தியாவை வளா்ச்சி அடைந்த நாடாக்குவதில் மாணவா்கள் ஆா்வமாக ஈடுபட வேண்டும் என்றாா்.

எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் செங்கோட்டையன்!

94 ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை: உச்சத்தில் வெள்ளி!

திடீரென செயலிழந்த ரயில்வே கேட்! நல்வாய்ப்பாக தப்பிய வாகன ஓட்டிகள்!

களம்காவல் புதிய வெளியீட்டுத் தேதி!

தில்லியின் நிலை இதுதான்; காற்று மாசால் குழந்தைக்கு அறுவைச் சிகிச்சை! - தாயின் ஆதங்கப் பதிவு

SCROLL FOR NEXT