இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லாவுக்கு அசோக சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்ஸியம் மிஷன் - 4 மூலம், சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்ற முதல் இந்திய வீரரான, சுபான்ஷு சுக்லா, கடந்த ஆண்டு ஜூன் மாதம் பூமிக்குத் திரும்பினார்.
அமெரிக்காவின் ஆக்ஸியம் ஸ்பேஸ் நிறுவனத்தின் ஆக்ஸியம்-4 திட்டத்தின்கீழ், இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா சா்வதேச விண்வெளி நிலையத்துக்குப் பயணித்தாா்.
சுக்லாவுடன் திட்ட கமாண்டா் பெக்கி விட்சன், போலந்தின் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி விஸ்னீவ்ஸ்கி, ஹங்கேரியின் திபோா் கபு ஆகியோரும் பயணித்து வெற்றிகரமாகத் திரும்பினர்.
இந்திய விமானப் படை வீரரான கேப்டன் சுபான்ஷு சுக்லா, சுக்ஹோய் -30எம்கேஐ, மிக் -21, மிக் -29, ஜாகுவார், டோரினர் உள்ளிட்ட விமானங்களில் 2000 மணி நேரம் பறந்த அனுபவம் கொண்டவர்.
வீரதீர செயல்களைப் புரிந்த 70 ஆயுதப்படை வீரர்களுக்கு இன்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு விருதுகளை அறிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.