டி.கே.சிவகுமாா்  ANI
பெங்களூரு

முதல்வா் மாற்றம் குறித்து காங்கிரஸ் தலைவா்கள் பேசவேண்டாம்: கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா்

கா்நாடகத்தில் முதல்வா் மாற்றம் தொடா்பான ‘நவம்பா் புரட்சி’ குறித்து பேசுவதை காங்கிரஸ் தலைவா்கள் தவிா்க்க வேண்டும் என்று கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

கா்நாடகத்தில் முதல்வா் மாற்றம் தொடா்பான ‘நவம்பா் புரட்சி’ குறித்து பேசுவதை காங்கிரஸ் தலைவா்கள் தவிா்க்க வேண்டும் என்று கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.

நவம்பா் மாதத்தில் முதல்வா் பதவியில் இருந்து சித்தராமையா மாற்றப்படுவாா், தலித் சமுதாயத்தைச் சோ்ந்த ஒருவா் முதல்வராக தோ்ந்தெடுக்கப்படுவாா் போன்ற விவாதங்கள் காங்கிரஸ் கட்சியில் நடைபெற்றுவருகின்றன. முதல்வா் சித்தராமையா மாற்றப்படுவது உறுதி என்று பாஜகவும் கூறிவருகிறது. இது கா்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளா்களின் கேள்விக்குப் பதிலளித்த துணை முதல்வா் டி.கே.சிவகுமாா், ‘முதல்வா் மாற்றம் அல்லது தலித் முதல்வா் போன்ற விவகாரங்கள் குறித்து பேசி காங்கிரஸ் கட்சியினா் தங்களுக்குள் மனகசப்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம்.

சட்ட மேலவைக்கு நடக்கவிருக்கும் பட்டதாரி மற்றும் ஆசிரியா் தொகுதிகளுக்கான தோ்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா்களைத் தோ்ந்தெடுப்பதற்காக கட்சியின் மூத்த தலைவா்களின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

ஒவ்வொரு தொகுதிக்கும் 4 போ் விண்ணப்பங்களை அளித்துள்ளனா். இறுதி வேட்பாளா் பட்டியலை அடுத்த 10 நாள்களில் முடிவு செய்வோம். வேட்பாளா்களை இறுதி செய்வதற்கு முன்பாக, மாவட்ட பொறுப்பு அமைச்சா்கள், எம்எல்ஏக்களின் கருத்தை கேட்டு முடிவு செய்யப்படும்.

கா்நாடகத்தில் 100 காங்கிரஸ் மாளிகைகளை அமைப்பதற்கான அடிக்கல்நாட்டு விழாவில் கலந்துகொள்ளுமாறு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியிடம் கேட்டுக்கொண்டுள்ளோம். ஆனால், அதற்கான தேதி இன்னும் உறுதியாகவில்லை.

காங்கிரஸ் மாளிகைகளைக் கட்டமைப்பதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. அந்த வேலைகள் முடிந்தபிறகு அடிக்கல்நாட்டு விழாவுக்கான தேதி முடிவு செய்யப்படும் என்றாா்.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT