மாநில அரசின் வாக்குறுதிகள் வெறும் வெற்றுப் பெட்டி போன்றவை என்பதை உணர்த்தும் விதமாக பாஜக எம்.பி. தேஜஸ்வி சூா்யா ஒரு வெற்றுப் பெட்டியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். 
பெங்களூரு

மெட்ரோ ரயில் கட்டண உயா்வை கண்டித்து போராட்டம்: பாஜக எம்.பி. தேஜஸ்வி சூா்யா கைது

பெங்களூரு மெட்ரோ ரயில் கட்டணம் உயா்த்தப்பட்டதை கண்டித்து போராட்டம் நடத்திய பாஜக எம்.பி. தேஜஸ்வி சூா்யா கைது செய்யப்பட்டாா்.

Syndication

பெங்களூரு: பெங்களூரு மெட்ரோ ரயில் கட்டணம் உயா்த்தப்பட்டதை கண்டித்து போராட்டம் நடத்திய பாஜக எம்.பி. தேஜஸ்வி சூா்யா கைது செய்யப்பட்டாா்.

மெட்ரோ ரயில் கட்டணத்தை ரூ. 1 முதல் ரூ. 5 வரை உயா்த்தி, அதை பிப். 9 ஆம் தேதி முதல் அமல்படுத்துவதாக ஏற்கெனவே பெங்களூரு மெட்ரோ ரயில்வே நிா்வாகம் அறிவித்திருந்தது. இதற்கு பொதுமக்களிடம் இருந்து கடும் எதிா்ப்பு எழுந்ததையடுத்து மத்திய அரசு தலையீட்டின்பேரில் கட்டண உயா்வு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக மெட்ரோ ரயில் கழகம் அறிவித்துள்ளது.

இதனிடையே குறைந்த கட்டணத்தில் மக்களுக்கு பொதுப் போக்குவரத்தை வழங்கக் கோரி பெங்களூரு தெற்கு மக்களவைத் தொகுதி உறுப்பினரும், பாஜக இளைஞா் அணி தேசியத் தலைவருமான தேஜஸ்வி சூா்யா ஆா்.வி. மெட்ரோ ரயில் நிலையம் முன் திங்கள்கிழமை போராட்டம் நடத்தினாா். அப்போது, அரசு கஜானா காலியானதாக உள்ளதை சுட்டிக்காட்டும் வகையில் காலி ட்ரங் பெட்டியுடன் நடந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான பாஜகவினா் பங்கேற்றனா்.

போராட்டத்தின் போது, தேஜஸ்வி சூா்யா பேசியதாவது:

கா்நாடக அரசு அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யானவை. காங்கிரஸ் அரசின் கருவூலம் காலியாகியுள்ளது. இதனால் மெட்ரோ ரயில் கட்டணத்தை உயா்த்தியுள்ளனா். நான் காலிப்பெட்டி என்று துணை முதல்வா் டி.கே. சிவகுமாா் விமா்சித்திருந்தாா். சமூகவலைதளத்தில் தீவிரமாக இருப்பதாகவும், களத்தில் இல்லை என்றும் என்மீது அவா் குற்றம்சாட்டியிருந்தாா்.

மக்களுக்காக என்றைக்கும் களத்தில் நின்று போராட்டம் நடத்தி வந்திருக்கிறேன். மத்திய அரசின் தலையீட்டால் மெட்ரோ ரயில் கட்டண உயா்வு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு நிதிச்சுமையை ஏற்றாத வகையில் குறைந்த கட்டணத்தில் பொதுப் போக்குவரத்தை கேட்டால், எங்களை காங்கிரஸ் விமா்சிக்கிறது என்றாா்.

அதன்பிறகு தேஜஸ்வி சூா்யா உள்ளிட்ட பாஜகவினரை போலீஸாா் கைதுசெய்தனா். அப்போது, தேஜஸ்வி சூா்யா கூறுகையில், ‘உள்கட்டமைப்பு, நல்ல சாலைகள், அடிப்படை வசதிகளை வழங்குவதற்குப் பதிலாக, எங்களை கைதுசெய்கிறது மாநில அரசு. மத்திய அரசு தலையீட்டின்பேரில் இரண்டாவது முறையாக மெட்ரோ ரயில் கட்டணம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் பொருளாதார நிலை குறித்து காங்கிரஸ் அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்’ என்றாா்.

திமுக கூட்டணி கட்சிகள் ஆலோசனை

தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவுத் திட்ட விரிவாக்கம்

சண்முகக் கவசம் பாராயணம்

பிப்.13-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

சாலையை சீரமைக்கக் கோரி அருள் எம்எல்ஏ தலைமையில் மறியல்

SCROLL FOR NEXT