சென்னை

சுந்தர சண்முகனார் பற்றிய குறுந்தகடு வெளியீட்டு விழா

தினமணி

புதுச்சேரி, நவ.11:  புதுச்சேரியின் மறைந்த தமிழறிஞர் பேராசிரியர் சுந்தரசண்முகனார் பற்றிய குறுந்தகடு வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

  பேராசிரியர் சுந்தரசண்முகனார் புதுச்சேரியில் வாழ்ந்து மறைந்த தமிழறிஞர். 70 நூல்களை எழுதி வெளியிட்டுள்ள இவர், தமிழக அரசின் திருவள்ளுவர் விருது உட்பட பல விருதுகளைப் பெற்றவர். அவருடைய 6 நூல்கள் பல பல்கலைக் கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டுள்ளன.  அவரைப் பற்றிய குறுந்தகடு பேராசிரியர் சுந்தரசண்முகனார் அறக்கட்டளையினரால் பேராசிரியரின் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.

  இந்த குறுந்தகட்டினை முன்னாள் புதுச்சேரி சட்டத்துறைச் செயலர் வயி.நாராயணசாமி வெளியிட்டார். அறக்கட்டளை துணைத் தலைவர் புலவர் வி.திருவேங்கடம் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பிரெஞ்சுப் பேராசிரியர் க.சச்சிதானந்தம், அறக்கட்டளை நிறுவனர் பேராசிரியர் சு.ச.சரவணன், செயலர் சு.வேல்முருகன், குறுந்தகட்டினை உருவாக்கிய செ.இலக்குவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?

பூண்டி ஏரியில் வேகமாக குறைந்து வரும் நீா்மட்டம்

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

SCROLL FOR NEXT