முகப்பு
சென்னை

பால் விலை உயர்வு: டீ கடைகளுக்கு நெருக்கடி

சென்னை, செப். 3: தமிழகத்தில் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளதால், டீ கடைகளில் வியாபாரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.   பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்யும் பாலின் விலையை உயர்த்துவதாக அண்ம

சென்னை

பால் விலை உயர்வு: டீ கடைகளுக்கு நெருக்கடி

சென்னை, செப். 3: தமிழகத்தில் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளதால், டீ கடைகளில் வியாபாரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.   பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்யும் பாலின் விலையை உயர்த்துவதாக அண்ம

Updated On : 25 டிசம்பர், 2023 at 3:27 PM
பகிர்:

சென்னை, செப். 3: தமிழகத்தில் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளதால், டீ கடைகளில் வியாபாரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

  பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்யும் பாலின் விலையை உயர்த்துவதாக அண்மையில் தமிழக அரசு அறிவித்தது. மேலும் ஆவின் பாலின் விற்பனை விலையும் அதிகரிக்கப்பட்டது. ஆவின் பால் விலை உயர்வு கடந்த செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வந்தது.

  ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து தனியார் பால் நிறுவனங்களும் பாலின் விற்பனை விலையை உயர்த்தியுள்ளன. பெரும்பாலான நிறுவனங்கள் சாதாரண பாலுக்கு லிட்டருக்கு ரூ.2-ம், கொழுப்புச் சத்து நிறைந்த பாலுக்கு ரூ.4-ம் விலை உயர்த்தியுள்ளன.

  இந்த பால் விலை உயர்வால் டீ கடைகளில் டீ விலையும் உயரும் என பரவலாகப் பேசப்படுகிறது. ஆனால் டீயின் விலையை உயர்த்த முடியாத நிலையில் இருப்பதாக டீ கடை உரிமையாளர்கள் பலர் தெரிவிக்கின்றனர். டீயின் விலை உயர உயர பெரும்பாலோர் தாங்கள் குடிக்கும் டீயின் அளவைக் குறைத்துக் கொள்வதால், வியாபாரம் பாதிக்கிறது என அவர்கள் கூறுகின்றனர்.

  இது குறித்து சேவை அமைப்பு ஒன்றின் நிர்வாகியான எம்.எஸ். ஸ்டீபன்நாதன் கூறியதாவது:

  ""நான் முன்பெல்லாம் தினமும் 8 முதல் 10 தடவை டீ குடிப்பது வழக்கம். டீயின் விலை ரூ.4 ஆக உயர்ந்த பிறகு 5 தடவைக்கு மேல் டீ குடிப்பதில்லை. டீயின் விலை இப்போது மேலும் உயருமானால், நானும் டீ குடிப்பதை மேலும் குறைத்துக் கொள்வேன். இன்று என்னைப் போன்றவர்களுக்கு உள்ள பொருளாதார நெருக்கடியில் இதைத்தவிர வேறு வழியில்லை'' என்றார்.

  சென்னை பெருநகர டீ கடை உரிமையாளர்கள் சங்க செயலாளர் டி. ஆனந்தன் கூறியதாவது:

  ""இப்போது சென்னையில் சுமார் 10 ஆயிரம் டீ கடைகள் உள்ளன. பால் விலை உயர்வுக்குப் பின் பெரும்பாலான கடைகளில் டீ விலை உயர்த்தப்படவில்லை. வியாபாரம் குறையும் அபாயம் இருப்பதே இதற்கு காரணம். எனினும் அனைத்து மூலப்பொருட்களின் விலையும் ஒரே நேரத்தில் உயர்ந்துள்ளது எங்களை மிகவும் பாதித்துள்ளது.

  கடந்த 4 மாதங்களில் மட்டும் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.300-க்கு மேல் அதிகரித்துள்ளது. 3 மாதங்களுக்கு முன்பு இருந்ததைவிட சர்க்கரை விலை கிலோவுக்கு ரூ.10-ம், டீத்தூள் விலை கிலோவுக்கு ரூ.40 வரையிலும் அதிகரித்துள்ளன. இந்த சூழலில் பாலின் விலையும் அதிகரித்துள்ளது.

  எனவே சென்னை நகரைப் பொருத்தவரை இப்போது டீ கடை நடத்துவது என்பது நெருக்கடி மிகுந்த தொழிலாக மாறி வருகிறது'' என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →