அதிமுக கவுன்சிலர் மீது அவதூறு வழக்கு
விருத்தாசலம், ஜன. 8: முதல்வர் கருணாநிதியை விமர்சித்து டிஜிட்டல் பேனர் வைத்திருந்ததாக விருத்தாசலம் அதிமுக நகர்மன்ற உறுப்பினர் மீது வியாழக்கிழமை அவதூறு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விருத்தாசலம் 22
விருத்தாசலம், ஜன. 8: முதல்வர் கருணாநிதியை விமர்சித்து டிஜிட்டல் பேனர் வைத்திருந்ததாக விருத்தாசலம் அதிமுக நகர்மன்ற உறுப்பினர் மீது வியாழக்கிழமை அவதூறு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விருத்தாசலம் 22-வது வார்டைச் சேர்ந்த அதிமுக நகர்மன்ற உறுப்பினர் மலர்மோகன். ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக விருத்தாசலம் பஸ் நிலையம் உள்ளிட்ட சில இடங்களில் டிஜிட்டல் பேனர் வைத்திருந்தார்.
இதில் தமிழக முதல்வரை விமர்சித்தும், பொதுமக்களிடம் அவதூறு பிரசாரத்தை பரப்பும் வகையிலும் பேனர் இருப்பதாகக் கூறி, மலர்மோகன் மீது காவல் துறையினர் அவதூறு வழக்குப் பதிவு செய்தனர்.
மேலும் டிஜிட்டல் பேனர்களை போலீஸôர் கைப்பற்றினர்.