முகப்பு
சென்னை

ரூ. 6 லட்சம் கையாடல்: வங்கி மேலாளர் மீது வழக்கு

சிதம்பரம், ஜன. 8: சிதம்பரத்தில் பலரிடம் ரூ. 6 லட்சம் பணம் கையாடல் செய்ததாக முன்னாள் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மேலாளரை சிதம்பரம் நகர குற்றப்பிரிவு போலீஸôர் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். வ

Updated On : 28 டிசம்பர், 2023 at 4:04 PM
பகிர்:

சிதம்பரம், ஜன. 8: சிதம்பரத்தில் பலரிடம் ரூ. 6 லட்சம் பணம் கையாடல் செய்ததாக முன்னாள் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மேலாளரை சிதம்பரம் நகர குற்றப்பிரிவு போலீஸôர் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பத்தைச் சேர்ந்தவர் அப்துல்ரஹீம் (37). பி.காம்  பட்டதாரியான இவர், கடந்த 2007-ம் ஆண்டு சிதம்பரம் ஐ.சி.ஐ.சி.ஐ. புரடென்சியல் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றினார். அப்போது குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த ஹரிபாபேகம், மகபூப்பீவி ஆகியோரிடம் பெற்ற டெபாசிட் தொகை தலா ரூ. 1 லட்சத்தை நிறுவனத்தில் வரவு வைக்காமல் போலி ரசீது கொடுத்து கையாடல் செய்துள்ளார்.

இது குறித்து ஹரிபாபேகம் 29-12-2008-ல் சிதம்பரம் நகர குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸôரால் தேடப்பட்டதால் அதன் பின்னர் அப்துல்ரஹீம் தலைமறைவானார். இந்நிலையில் அப்துல்ரஹீம் சமீபத்தில் 21-12-2010-ல் சென்னை நுங்கம்பாக்கம் ஐ.சி.ஐ.சி.ஐ. நிறுவனத்தில் பெயரை மாற்றி மீண்டும் வேலையில் சேர முயன்றுள்ளார்.

அப்போது அதிகாரிகளுக்கு உண்மை தெரியவந்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் அவரை ஒப்படைத்தனர். போலீஸôர் வழக்குப் பதிந்து அப்துல்ரஹீமை கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்ரண்டன்ட் அஸ்வின் எம்.கோட்னீஸின் உத்தரவின் பேரில், சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் எஸ்.கார்த்திகேயன் மற்றும் குற்றப்பிரிவு போலீஸôர் அப்துல்ரஹீமை 3 நாள் நீதிமன்றக் காவல் எடுத்து சென்னை புழல் சிறையிலிருந்து வெள்ளிக்கிழமை சிதம்பரம் அழைத்து வந்தனர். விசாரணையில், சிதம்பரத்தில் பலரிடம் ரூ. 6 லட்சம் கையாடல் செய்தது தெரியவந்துள்ளது.

மேலும் இது குறித்து போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.