பதவி உயர்வு பட்டியல் வெளியீடு: தொழிலாளர் ஆணையருக்கு நன்றி
கடலூர், ஜூலை 16: உதவியாளர்கள், கண்காணிப்பாளர்கள் பதவி உயர்வு அங்கீகரிக்கப்பட்ட பட்டியலை வெளியிட்ட தொழிலாளர் ஆணையருக்கு, தொழிலாளர் மற்றும் தொழிற்சாலைகள் ஆய்வகத்துறை ஊழியர் சங்க செயற்குழு கூட்டத்தில் நன
கடலூர், ஜூலை 16: உதவியாளர்கள், கண்காணிப்பாளர்கள் பதவி உயர்வு அங்கீகரிக்கப்பட்ட பட்டியலை வெளியிட்ட தொழிலாளர் ஆணையருக்கு, தொழிலாளர் மற்றும் தொழிற்சாலைகள் ஆய்வகத்துறை ஊழியர் சங்க செயற்குழு கூட்டத்தில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு தொழிலாளர் துறை மற்றும் தொழிற்சாலைகள் ஆய்வகத்துறை ஊழியர்கள் சங்கத்தின் மாநில மத்திய செயற்குழுக் கூட்டம் கடலூரில் சனிக்கிழமை நடந்தது.
சங்கத் தலைவர் செ.பிரான்சிஸ் சேவியர் தலைமையில் நடந்த கூட்டத்தில், கடலூர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.எஸ்.வெங்கடேசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இக்கூட்டத்தில் கடலூரில் இயங்கிவரும் தொழிலாளர் துறை அலுவலகங்களை சொந்த கட்டடத்தில் ஒரே வளாகத்தில் செயல்பட ஏற்பாடு செய்தல், முத்திரைக் கொல்லர் பணியிடங்களை நிரப்புவதற்கான வயது வரம்பை தளர்வு செய்ய நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் பொதுச் செயலர் இரா.இராமதாஸ், பொருளாளர் க.ல.ரேவதி, துணைத் தலைவர்கள் கோ.ராஜராஜன், த.பரமசாமி, இணைப் பொதுச் செயலர்கள் த.ராஜேந்திரன், சூ.ஜெராட், பா.ரமேஷ், அமைப்பு செயலர் பி.எஸ்.விஜயராகவன், சாம்பசிவம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Advertisement