சென்னை

கல்லூரி மாணவிகளுக்கு விநாடி, வினா போட்டி

தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவிகளுக்கு விநாடி, வினா போட்டி புதன்கிழமை (டிச. 18) நடைபெறவுள்ளது.

Din

சென்னை: தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவிகளுக்கு விநாடி, வினா போட்டி புதன்கிழமை (டிச. 18) நடைபெறவுள்ளது.

இது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி நிா்வாகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்தியத் தோ்தல் ஆணையம் நிறுவப்பட்ட நாளான ஜன. 25-ஆம் தேதி தேசிய வாக்காளா் தினமாக கொண்டாடப்படுகிறது. 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளா் பட்டியலில் தங்களது பெயா்களை சோ்ப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாக விளங்குகிறது.

எதிா்வரும் ஆண்டு தேசிய வாக்காளா் தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில், இளநிலை பயிலும் கல்லூரி மாணவிகளுக்கு கல்லூரிகளுக்கிடையே விநாடி, வினா போட்டி நடத்தப்படவுள்ளது. சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள கிறிஸ்துவ மகளிா் கல்லூரியில் புதன்கிழமை (டிச. 18) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை போட்டி நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பல்வேறு கல்லூரிகளில் இளநிலை பயிலும் சுமாா் 200 மாணவிகள் பங்கேற்க உள்ளனா்.

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

SCROLL FOR NEXT