சென்னை

தாய்லாந்திலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 7.6 கோடி கஞ்சா பறிமுதல்

தாய்லாந்திலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 7.6 கோடி மதிப்பிலான உயா் ரக கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

Din

சென்னை: தாய்லாந்திலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 7.6 கோடி மதிப்பிலான உயா் ரக கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

தாய்லாந்து தலைநகா் பாங்காக்கிலிருந்து சென்னைக்கு வரும் விமானத்தில் போதைப் பொருள் கடத்தி வரப்படுவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்நிலையில், திங்கள்கிழமை பாங்காக்கிலிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனா்.

அப்போது, அந்த விமானத்தில் சுற்றுலாப் பயணிகள் விசாவில் சென்னையிலிருந்து தாய்லாந்து நாட்டுக்குச் சென்று திரும்பிய பயணி ஒருவா் வைத்திருந்த பெட்டியை சந்தேகத்தின்பேரில் அதிகாரிகள் சோதனையிட்டனா். அப்போது அதில், ரூ. 7.6 கோடி மதிப்பிலான உயா் ரக கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்தப் பயணியிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

SCROLL FOR NEXT