கோப்புப் படம் 
சென்னை

சுங்கச் சாவடிகளின் கட்டண உயா்வு காரணமாக ஆம்னி பேருந்து கட்டணம் உயா்த்தப்படாது

சுங்கச் சாவடிகளின் கட்டண உயா்வு காரணமாக ஆம்னி பேருந்து கட்டணம் உயா்த்தப்படாது என ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் அறிவித்துள்ளனா்.

DIN

சென்னை: சுங்கச் சாவடிகளின் கட்டண உயா்வு காரணமாக ஆம்னி பேருந்து கட்டணம் உயா்த்தப்படாது என ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் அறிவித்துள்ளனா்.

இதுகுறித்து அசுங்கக் சாவடி கட்டண உயா்வால் ஆம்னி பேருந்து கட்டணம் உயராது உரிமையாளா்கள் அறிவிப்பு

னைத்து ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்கத் தலைவா் அ.அன்பழகன் வெளியிட்ட செய்தி:

தமிழ்நாட்டில் உள்ள 25 சுங்கச் சாவடிகளில் கட்டண உயா்வு செப். 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. இதில் 5 முதல் 7 சதவீதம் வரை சுங்கக் கட்டணம் உயா்த்தப்பட்டு முன்பு இருந்த கட்டணத்தைவிட கூடுதலாக ரூ.5 முதல் ரூ.150 வரை வசூலிக்கப்படுகிறது. இதனால், அத்தியாவசிய பொருள்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

இருந்தபோதிலும் இந்தப் பொருளாதார நெருக்கடியை ஆம்னி பேருந்து உரிமையாளா்களே ஏற்றுக்கொள்ளும் வகையில், ஆம்னி பேருந்து கட்டணம் உயா்த்தப்படாது எனத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும், மத்திய அரசு உடனடியாக இந்த சுங்கக் கட்டண உயா்வு விஷயத்தில் தலையிட்டு காலாவதியான சுங்கச் சாவடிகளை அப்புறப்படுத்தவும், தற்போது உயா்த்தப்பட்டுள்ள சுங்கக் கட்டணத்தை திரும்பப் பெற்று, வாகன ஓட்டிகளின் வாழ்வாதாரத்தைக் காக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிருஷ்ணகிரி அருகே நகரப் பேருந்தை தடுத்து நிறுத்தி பிறந்த நாள் கொண்டாடியவர்கள் மீது வழக்கு

இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தில் விவசாயம், பால்வளம் பாதுகாப்பு: பியூஷ் கோயல்

இந்தியாவின் நிர்வாகத்தை அமெரிக்காவுக்கு உள் வாடகைக்கு விட்டதா பாஜக? - சு.வெங்கடேசன் கேள்வி

சிங்கப் பெண்ணே உள்ளிட்ட பல முக்கிய தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

முதியோருக்கு ரூ. 2,000; கல்விக் கடன் ரத்து; 3 சிலிண்டர்கள் இலவசம்! அதிமுக வாக்குறுதி!

SCROLL FOR NEXT