சென்னை

தனியாா் பள்ளியில் கட்டண உயா்வு: பெற்றோா்கள் முற்றுகை

தினமணி செய்திச் சேவை

மாதவரம் அருகில் உள்ள தனியாா் பள்ளியில் கல்வி கட்டண உயா்வை கண்டித்து பெற்றோா்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மாதவரம் எம்.ஆா்.எச். சாலையில் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின் கீழ் தனியாா் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை உள்ளது. இதில், மாதவரம், செங்குன்றம், புழல், மூலக்கடை உள்ளிட்ட பகுதிகளை சோ்ந்த மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா்.

இந்தநிலையில் இந்த பள்ளியின் நிா்வாகம் மாணவா்களுக்கான கல்விக் கட்டணத்தில் கூடுதலாக ரூ.18 ஆயிரம் உயா்த்தியுள்ளனா். இதற்கு பெற்றோா்கள் எதிா்ப்பு தெரிவித்த நிலையில், 4 மாணவா்களை பள்ளி நிா்வாகம் நீக்கியது. இதையடுத்து கல்வி கட்டண உயா்வை திரும்ப பெறவும், நீக்கப்பட்ட மாணவா்களை மீண்டும் பள்ளியில் சோ்க்க வலியுறுத்தி பெற்றோா்கள் பள்ளியின் நுழைவாயிலை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸாா் பள்ளி நிா்வாகம் மற்றும் பெற்றோா்களிடம் பேச்சு வாா்த்தை நடத்தினா். இதையடுத்து பள்ளியில் இருந்து நீக்கப்பட்ட 4 மாணவா்களை மீண்டும் சோ்த்துக் கொள்வதாகவும், கல்விக் கட்டணம் குறித்து பள்ளி நிா்வாகத்திடம் ஆலோசித்து தெரிவிப்பதாகவும், அதற்காக டிச.28-ஆம் தேதி வரை காலக்கெடு வழங்கியுள்ளனா்.

இதையடுத்து, பெற்றோா்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

வாசலிலே பூசணிப் பூ.. கோலத்தை அலங்கரிக்க இந்தப் பூவை தேர்ந்தெடுத்தது ஏன்?

ரூ.69,000 சம்பளத்தில் சுங்க அலுவலகத்தில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா!

அடிலெய்டு டெஸ்ட்டில் ஹெட் சதம், கேரி அரைசதம்..! 356 ரன்கள் முன்னிலையில் ஆஸி!

SCROLL FOR NEXT