சென்னை

சென்னை விமானங்களில் லேசர் ஒளி அடித்து அச்சுறுத்தல்: பயணிகள் அச்சமடைய வேண்டாம் - விமான நிலைய நிர்வாகம்

சென்னை வரும் விமானங்களில் லேசர் ஒளி அடித்து அச்சுறுத்தல்: பயணிகள் அச்சமடைய வேண்டாம் - விமான நிலைய நிர்வாகம்

DIN

சென்னையில் விமானம் மீது மீண்டும் லேசர் ஒளி அடிக்கப்பட்ட விவகாரத்தில் பயணிகள் அச்சம் கொள்ள தேவையில்லை என்று சென்னை விமான நிலைய நிர்வாகம் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் தரையிறங்க வந்த விமானத்தின் மீது இன்று காலை மீண்டும் லேசர் ஒளி அடிக்கப்பட்டுள்ளதால் பயணிகளிடையே அச்சம் மூண்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் புணேவில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு 178 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் செவ்வாய்க்கிழமை அதிகாலை வந்துள்ளது. விமானம் தரையிறங்கும் நேரத்தில், சென்னை பரங்கிமலை பகுதியில் இருந்து விமானத்தின் மீது சக்திவாய்ந்த லேசர் ஒளி அடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னை விமான நிலைய நிர்வாகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், இது குறித்து பயணிகள் அச்சம் கொள்ள வேண்டாமெனவும், விமானிகள், காவல் துறை உதவியுடன், விமானங்கள் மீது லேசர் அடித்து பயணத்துக்கு இடையூறு விளைவிப்போரை கண்காணித்து நடவடிக்கை எடுக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,895 கோடி டாலராக உயா்வு

தென் மாநிலங்களில் பாஜக வலிமையான வளா்ச்சி: தேசிய செயல் தலைவா் நிதின் நபின்!

SCROLL FOR NEXT