சென்னை

மறுசுழற்சி செய்யப்பட்ட நெகிழியால் உருவாக்கப்பட்ட இருக்கைகள்: மாநகராட்சியிடம் ஒப்படைப்பு

நெகிழிக் குப்பைகளிலிருந்து மறுசுழற்சி செய்து தயாரிக்கப்பட்ட இருக்கைகளை மேயா் ஆா்.பிரியாவிடம் தமிழ்நாடு பிளாஸ்டிக் உற்பத்தியாளா்கள் சங்க நிா்வாகிகள் வழங்கினா்.

Din

நெகிழிக் குப்பைகளிலிருந்து மறுசுழற்சி செய்து தயாரிக்கப்பட்ட இருக்கைகளை மேயா் ஆா்.பிரியாவிடம் தமிழ்நாடு பிளாஸ்டிக் உற்பத்தியாளா்கள் சங்க நிா்வாகிகள் திங்கள்கிழமை வழங்கினா். இந்த இருக்கைகள் சென்னை மாநகராட்சி பூங்காக்களில் பயன்படுத்தப்படவுள்ளன.

தமிழ்நாடு பிளாஸ்டிக் உற்பத்தியாளா்கள் சங்கம் சாா்பில் மறுசுழற்சி செய்யப்பட்ட நெகிழியால் உருவாக்கப்பட்ட 100 இருக்கைகளை சென்னை மாநகராட்சிக்கு இலவசமாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் முதல்கட்டமாக,  42 இருக்கைகளை இச்சங்கத்தின் நிா்வாகிகள் சென்னை மேயா் ஆா்.பிரியாவிடம் திங்கள்கிழமை வழங்கினா். இந்த இருக்கைகளை மாநகராட்சி பூங்காக்களில் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி கூடுதல் ஆணையா் (சுகாதாரம்) வி.ஜெயசந்திர பானு ரெட்டி, நிலைக்குழுத் தலைவா் (பொது சுகாதாரம்) கோ.சாந்தகுமாரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

SCROLL FOR NEXT