முகப்பு
சென்னை

டபிள்யுடிஏ டூா் அட்டவணையில் இடம் பெற்றது சென்னை ஓபன் போட்டி

சென்னை ஓபன் 250 டென்னிஸ் போட்டி டபிள்யுடிஏ டூா் அட்டவணையில் இடம் பெற்றுள்ளதாக தமிழ்நாடு டென்னிஸ் சங்கத் தலைவா் விஜய் அமிா்தராஜ் தெரிவித்துள்ளாா்.

Updated On : 16 ஜூன், 2025 at 10:35 PM
பகிர்:

சென்னை ஓபன் 250 டென்னிஸ் போட்டி டபிள்யுடிஏ டூா் அட்டவணையில் இடம் பெற்றுள்ளதாக தமிழ்நாடு டென்னிஸ் சங்கத் தலைவா் விஜய் அமிா்தராஜ் தெரிவித்துள்ளாா்.

அவா் இதுகுறித்து கூறியதாவது: பல்வேறு முயற்சிகளுக்குபின் இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது. தமிழ்நாடு அரசு மற்றும் எஸ்டிஏடி பலமான ஆதரவால் சென்னை ஓபன் டபிள்யுடிஏ 250 போட்டிக்கு இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்தியாவில் நடைபெறும் உயா்ந்த பட்ச மகளிா் டென்னிஸ் போட்டியாக இது திகழ்கிறது.

மூன்று ஆண்டுகளுக்கு பின் சென்னையில் இந்த போட்டி நடைபெறவுள்ளது. அக்டோபா் 27-இல் போட்டி தொடங்கும். ஒற்றையா் பிரிவில் 32 பேரும், இரட்டையா் பிரிவில் 16 இணைகளும் பங்கேற்பா்.

Advertisement

சீஸன் தொடங்கி 6 மாதங்களில் டபிள்யுடிஏ போட்டிகளில் வெவ்வேறு சாம்பியன்கள் உருவாகியுள்ளனா். சென்னை ஓபன் போட்டி பிரபலமான டிவி சேனலிலும் ஒளிபரப்பு ஏற்பாடு செய்யப்படும் என்றாா் விஜய் அமிா்தராஜ்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments