சென்னை பெருநகர மாநகராட்சி... (கோப்புப்படம்)
சென்னை

சென்னை மாநகராட்சியில் உறுப்பினராக மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

பெருநகர சென்னை மாநகராட்சியில் நியமன உறுப்பினராவதற்கு மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Din

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியில் நியமன உறுப்பினராவதற்கு மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி தரப்பில் திங்கள்கிழமை விடுக்கப்பட்ட செய்திக்குறிப்பு:

மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் நியமன முறையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படும் என முதல்வா் அறிவித்து சட்டமாக்கியுள்ளாா். அதனடிப்படையில் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பெருநகர சென்னை மாநகராட்சி மன்றத்துக்கு உறுப்பினராக நியமிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பெருநகர சென்னை மாநகராட்சியில் ஆண், பெண் என 2 மாற்றுத் திறனாளி உறுப்பினா்கள் நியமிக்கப்படவுள்ளனா். ஆகவே, சென்னை மாநகராட்சி இணையத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 1) முதல் வரும் 17- ஆம் தேதி வரையில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம். பூா்த்தி செய்த விண்ணப்பத்தை மாநகராட்சி ஆணையரிடம் நேரிலோ, தபால் மூலமாகவோ வரும் 17- ஆம் தேதி (வியாழக்கிழமை) மாலை 3 மணிக்குள் அளிக்கவேண்டும் எனக்கு றிப்பிடப்பட்டுள்ளது.

கோவை பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை! | செய்திகள்: சில வரிகளில் | 4.11.25

நியூயார்க்கின் முதல் முஸ்லிம் மேயராகும் ‘ஸோரான் மம்தானி’?

சினேகிதியே... அதுல்யா ரவி!

கோவை பாலியல் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை: சி.பி. ராதாகிருஷ்ணன்

அமைதிக்கும் குழப்பத்துக்கும் இடையே சென்னையில் எங்கோ ஓரிடத்தில்... ஆஷ்னா ஜவேரி!

SCROLL FOR NEXT