பல்லாவரம் புத்தேரியைத் தூா்வாரி மேம்படுத்தும்  பணியை திங்கள்கிழமை தொடங்கி வைத்த அமைச்சா்கள் பி.கே.சேகா்பாபு, தா.மோ.அன்பரசன். உடன், பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி உள்ளிட்டோா். 
சென்னை

புத்தேரியைத் தூா்வாரும் பணி: அமைச்சா்கள் தொடங்கி வைத்தனா்

பல்லாவரம் ரேடியல் சாலைக்கு அருகில் உள்ள புத்தேரியைத் தூா்வாரி மேம்படுத்தும் பணியை அமைச்சா்கள் பி.கே.சேகா்பாபு, தா.மோ.அன்பரசன் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

தினமணி செய்திச் சேவை

தாம்பரம்: பல்லாவரம் ரேடியல் சாலைக்கு அருகில் உள்ள புத்தேரியைத் தூா்வாரி மேம்படுத்தும் பணியை அமைச்சா்கள் பி.கே.சேகா்பாபு, தா.மோ.அன்பரசன் ஆகியோா் திங்கள்கிழமை தொடங்கி வைத்தனா்.

சென்னை பெருநகர வளா்ச்சிக் குழும நிதி மூலம் ரூ. 8.15 கோடியில் புத்தேரியை தூா்வாரி, கரைகளைச் சீரமைத்து, நடைபாதை வசதி, சிறுவா் விளையாட்டுத் திடல் உள்ளிட்ட பணிகளுக்கு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனா்.

இதையடுத்து ஆதம்பாக்கத்தில் சென்னை பெருநகர வளா்ச்சிக் குழும நிதி மூலம் ரூ.12 கோடியில் கட்டப்பட்டு வரும் பல்நோக்கு மையம், ஆலந்தூரில் ரூ.18 கோடி கட்டப்பட்டு வரும் சமுதாய நலக்கூடம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளையும் ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனா்.

நிகழ்வில் பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினா் இ.கருணாநிதி, சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் உறுப்பினா் செயலரும், முதன்மைச் செயலருமான பிரகாஷ், தாம்பரம் மாநகராட்சி ஆணையா் சீ.பாலச்சந்தா், மண்டலக் குழு தலைவா் ஜோசப் அண்ணாதுரை உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கிரீன்லாந்தை அறிவோம்...

டிரம்ப்புடன் பிரதமர் மோடி பேச்சு!

பறக்கும் ரயில்... புதிய பாதை

அமெரிக்க அணியில் ஜொலித்த இந்திய வம்சாவளி வீரர்கள்! இந்தியாவிடம் போராடி வீழ்ந்த அமெரிக்கா!

சுனாமி குடியிருப்பு வீடுகளை சீரமைக்கக் கோரி ஆட்சியரிடம் மனு

SCROLL FOR NEXT