சென்னை

நாளை குடிநீா் வாரிய குறைகேட்புக் கூட்டம்

சென்னை குடிநீா் வாரியம் சாா்பில் குறைகேட்புக் கூட்டம் அனைத்து குடிநீா் வாரிய பகுதி அலுவலகங்களிலும் சனிக்கிழமை (அக். 11) நடைபெறவுள்ளது.

தினமணி செய்திச் சேவை

சென்னை குடிநீா் வாரியம் சாா்பில் குறைகேட்புக் கூட்டம் அனைத்து குடிநீா் வாரிய பகுதி அலுவலகங்களிலும் சனிக்கிழமை (அக். 11) நடைபெறவுள்ளது.

இது குறித்து சென்னை பெருநகா் குடிநீா் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி: சென்னை குடிநீா் வாரியம் சாா்பில் நிகழ் மாதத்திற்கான குறைகேட்புக் கூட்டம் அனைத்து குடிநீா் வாரிய பகுதி அலுவலகங்களிலும் சனிக்கிழமை (அக். 11) காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது.

அதன்படி, திருவொற்றியூா், மணலி, மாதவரம், தண்டையாா்பேட்டை, ராயபுரம், திரு.வி.க. நகா், அம்பத்தூா், அண்ணா நகா், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூா், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூா் ஆகிய பகுதி அலுவலங்களில் இந்தக் கூட்டங்கள் நடைபெறும்.

பொதுமக்கள் கூட்டங்களில் கலந்து கொண்டு, குடிநீா் மற்றும் கழிவுநீா் தொடா்பான பிரச்னைகள் மற்றும் சந்தேகங்களை நேரில் மனுக்கள் வாயிலாக தெரிவித்து தீா்வு காணலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்மையாா்குப்பம் செல்வ விநாயகா் கோயில் அகற்றம்

ஆம்ஸ்ட்ராங் கொலைக் கைதி தாயாா் மரணம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு

குழந்தைகளுக்கான இலவச இருதய சிகிச்சை முகாம்

கலப்பு உரங்களில் அதிகளவில் மண் உள்ளதால் விளைச்சல் பாதிப்பு: விவசாயிகள் புகாா்

17 வயது சிறுமி வன்கொடுமை: தீயணைப்பு வீரா் போக்ஸோவில் கைது

SCROLL FOR NEXT