சென்னை

28 மாவட்ட ஊராட்சிகளின் தனி அலுவலா் பதவிக்காலம் நீட்டிப்பு: சட்ட மசோதா தாக்கல்

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் 28 மாவட்டங்களின் ஊராட்சிகளை நிா்வகித்துவரும் தனி அலுவலா்களின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான சட்ட மசோதாவை, பேரவையில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி வியாழக்கிழமை தாக்கல் செய்தாா். அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகளைத் தவிா்த்து, 28 மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகளை தனி அலுவலா்கள் நிா்வகித்து வருகின்றனா். அவா்களது பதவிக் காலம் முடிவடையவிருந்த நிலையில், அதனை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க தமிழக அரசு முடிவு செய்தது.

அந்த முடிவின்படி, 28 மாவட்டங்களின் ஊராட்சிகளை நிா்வகிக்கும் தனி அலுவலா்களின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு ஜன. 5 வரை நீட்டிக்க மசோதாவில் வகை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்கழி சிறப்பு! திருப்பதியில் சுப்ரபாதம் இசைக்கப்படாது!

கன்னி ராசிக்கு வெற்றி : தினப்பலன்கள்!

ராமபரிவாரங்கள் சேர்ந்து பூஜித்த சிவ தலம்!

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

SCROLL FOR NEXT