புகை மண்டலமாகக் காட்சியளிக்கும் சென்னை: அபாய அளவில் காற்றின் தரம்!
சென்னையில் 400-ஐ எட்டிய காற்றின் தரக் குறியீடு!
சென்னையில் காற்றின் தரக் குறியீடு உயர் அளவை எட்டியதால் காற்றின் தரம் அபாய அளவில் நீடிக்கிறது.
தீபாவளியையொட்டி இன்று(அக். 20) 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்ட போதிலும், அதனையும் மீறி காற்றின் தரம் மோசமடைந்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக அம்பத்தூரில் காற்றின் தரக் குறியீடு 400-ஐ கடந்து பதிவாகியுள்ளது என்று வானிலை ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
காற்றில் ஈரப்பதம் அதிகளவில் இருப்பதால் பட்டாசுப் புகை கலைந்து செல்வது தாமதப்படுவதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் மாநகரின் பெரும்பாலான பகுதிகளும் புகை சூழ்ந்து காணப்படுகிறது.
summary