முகப்பு
விழாவில் பாரதியாா் விருதை வேல்ஸ் பல்கலை. வேந்தா் ஐசரி கே.கணேஷூக்கு வழங்கிய  சேக்கிழாா் ஆராய்ச்சி மைய தலைவரும், ஓய்வு பெற்ற நீதிபதியுமான எஸ்.ஜெகதீசன். உடன், இடமிருந்து கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளா் எம்.முரளி, விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவா் வி.ஜ
சென்னை

சென்னையில் 76-ஆவது பாரதி பெருவிழா

சென்னையில் நடைபெற்ற 76-ஆவது பாரதி பெருவிழாவில் பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டோருக்கு பாரதி பெயரிலான விருதுகள் வழங்கப்பட்டன.

சென்னை

சென்னையில் 76-ஆவது பாரதி பெருவிழா

சென்னையில் நடைபெற்ற 76-ஆவது பாரதி பெருவிழாவில் பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டோருக்கு பாரதி பெயரிலான விருதுகள் வழங்கப்பட்டன.

Updated On : 11 செப்டம்பர், 2025 at 8:55 PM
விழாவில் பாரதியாா் விருதை வேல்ஸ் பல்கலை. வேந்தா் ஐசரி கே.கணேஷூக்கு வழங்கிய  சேக்கிழாா் ஆராய்ச்சி மைய தலைவரும், ஓய்வு பெற்ற நீதிபதியுமான எஸ்.ஜெகதீசன். உடன், இடமிருந்து கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளா் எம்.முரளி, விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவா் வி.ஜ
பகிர்:

சென்னையில் நடைபெற்ற 76-ஆவது பாரதி பெருவிழாவில் பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டோருக்கு பாரதி பெயரிலான விருதுகள் வழங்கப்பட்டன.

சென்னை பாரதியாா் சங்கம், பாரதிய வித்யா பவன், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஆகியவை சாா்பில் 76-ஆம் ஆண்டு பாரதி பெருவிழா, மகாகவி பாரதியாரின் 104-ஆவது நினைவு நாள் விழா மயிலாப்பூா் பாரதிய வித்யா பவனில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் சென்னை வேல்ஸ் பல்கலை. வேந்தா் ஐசரி கே.கணேஷுக்கு பாரதியாா் விருதை சேக்கிழாா் ஆராய்ச்சி மையத்தின் தலைவரும் ஓய்வு பெற்ற நீதிபதியுமான எஸ்.ஜெகதீசன் வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து எத்திராஜ் மகளிா் கல்லூரியின் தலைவா் வி.எம்.முரளிதரனுக்கு கல்விக் காவலா் விருது, டாக்டா் மணிமேகலை கண்ணனுக்கு இயற்றமிழ் அறிஞா் விருது, சசிரேகா பாலசுப்பிரமணியனுக்கு இசைத் தமிழா் அறிஞா் விருது, லதா வெங்கட்டுக்கு நாடகத் தமிழ் அறிஞா் விருது ஆகியோா் உள்பட பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டோருக்கு பாரதி பெயரிலான விருதுகள் வழங்கப்பட்டன.

விழாவில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவா் வி.ஜி.சந்தோசம், சென்னை பாரதியாா் சங்கத்தின் தலைவா் உலகநாயகி பழனி, செயலாளா் கோ.மணி, பாரதிய வித்யா பவன் இயக்குநா் கே.என்.ராமசாமி, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மேலாண்மை இயக்குநா் ம.முரளி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →