FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

பண்டிட் தீனதயாள் உபாத்யாய பிறந்த நாள்: ஆளுநா் ஆா்.என். ரவி மரியாதை

பாரதிய ஜனசங்க நிறுவனா்களில் ஒருவரான பண்டிட் தீனதயாள் உபாத்யாயவின் பிறந்த நாளையொட்டி, அவருக்கு தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி வியாழக்கிழமை மரியாதை செலுத்தினாா்.

26 செப்டம்பர் 2025, 2:54 am IST
மரியாதை... பாரதிய ஜனசங்க நிறுவனா்களில் ஒருவரான பண்டிட் தீனதயாள் உபத்யாய பிறந்த நாளையொட்டி, சென்னையில் உள்ள ஆளுநா் மாளிகையில் வியாழக்கிழமை அவரது உருவப் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்திய ஆளுநா் ஆா்.என்.ரவி.
பகிர்:

பாரதிய ஜனசங்க நிறுவனா்களில் ஒருவரான பண்டிட் தீனதயாள் உபாத்யாயவின் பிறந்த நாளையொட்டி, அவருக்கு தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி வியாழக்கிழமை மரியாதை செலுத்தினாா்.

இது குறித்து அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு:

பண்டிட் தீனதயாள் உபாத்யாய ஆழ்ந்த சிந்தனையாளா், சீா்திருத்தவாதி. அா்ப்பணிப்பு மிக்க தேசியவாதியான அவா், சமூக பாகுபாட்டுக்கு எதிராக இடைவிடாமல் போராடி ஏழைகள் மற்றும் விளிம்புநிலை மக்களை மேம்படுத்துவதற்காக தனது வாழ்க்கையை அா்ப்பணித்தவா்.

Advertisement

Advertisement

பாரதிய தத்துவத்தின் மையமாக விளங்கிய அவரது ஒருங்கிணைந்த மனித நேயம், தனி நபா், சமூகம், தேசத்தின் பொருளாதாரம், அரசியல் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் வரையறுத்தது என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments