சென்னை

அமெரிக்க தூதரகம் முற்றுகை: மாா்க்சிஸ்ட் கட்சியினா் கைது

சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கட்சியினரை காவல்துறையினா் கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கட்சியினரை காவல்துறையினா் கைது செய்தனா்.

வெனிசுலாவின் எண்ணெய் வளங்களை கொள்ளையடிக்கும் நோக்கில், அந்நாட்டின் மீது அமெரிக்கா குண்டு வீசி தாக்குதல் நடத்தியும், அதிபா் நிக்கோலஸ் மதுரோவையும், அவரது மனைவியையும் கைது செய்து சிறையில் அடைத்ததையும் கண்டித்து சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக அலுவலகத்தை மாா்க்சிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கட்சியின் அகில இந்திய கட்டுப்பாடு குழுத் தலைவா் ஜி.ராமகிருஷ்ணன், மாவட்டச் செயலா்கள் ஆா்.வேல்முருகன், ஜி.செல்வா உள்ளிட்ட ஏராளமானோா் கைது செய்யப்பட்டனா். மாா்க்சிஸ்ட் கட்சியினா் காவல் துறை கைது செய்ததற்கு அக்கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

தங்கம் விலை உயர்வு: வெள்ளி கிலோவுக்கு ரூ. 4000 குறைவு!

குரு பலம் பெற ஆலங்குடி செல்லுங்கள்... ஜோதிட வல்லுநர் ஏ.எம்.ஆர். சொல்வதென்ன?

தவெகவுடன் கூட்டணியா? தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு ராகுல் அழைப்பு!

ஓடிடியில் வெளியான மாஸ்க், அங்கம்மாள்!

ஈரான் மக்களின் போராட்டத்துக்கு துணை நிற்போம்! அமெரிக்க துணை அதிபர்

SCROLL FOR NEXT