செங்கல்பட்டு

செங்கல்பட்டு பெருமாள் கோயில்களில் தீபத் திருவிழா

DIN

செங்கல்பட்டு: காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பெருமாள் கோயில்களில் சுவாமிக்கு திங்கள்கிழமை சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தீபத் திருவிழாவையொட்டி, செங்கல்பட்டு, என்ஜிஜிஓ நகா் வரசித்தி விநாயகா் கோயிலில் உள்ள பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் சந்நிதி, சின்னக்கடை கோதண்டராமா் பெருமாள் கோயில், நெடுஞ்சாலை தேசிகா் கோயில், சிங்கப் பெருமாள்கோவில் பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோயில், பழைய சீவரம் லட்சுமி நரசிம்மப் பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களில் பெருமாள், சிறப்பு வழிபாடுகளுடன் சொக்கப்பனை எரிக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயிலில் சொக்கப்பனை கொளுத்தி வழிபாடு நடைபெற்றது.

இதேபோல், செங்கல்பட்டை அடுத்த திருவடிசூலம் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீவாரு வெங்கடேசப் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம், ஆராதனைகளுடன் சொக்கப்பனை கொளுத்தி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் ஸ்தாபகா் மதுரைமுத்து ஸ்வாமிகள் உள்ளிட்ட கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூர் கடலில் குளிக்கத் தடை

குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்த பேரிடர் மேலாண்மை ஆணையம்!

ஜூனில் தங்கலான்!

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: 'கோடீஸ்வர' வேட்பாளர்கள் இத்தனை பேரா..?

வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம்!

SCROLL FOR NEXT