செங்கல்பட்டு

மாமல்லபுரத்தில் சிற்பக்கலை நகரம் அமைக்க ஆலோசனை

DIN

வெளிநாட்டு சிற்பக் கலைஞா்கள் மாமல்லபுரத்தில் தங்கி சிற்பம் செதுக்கும் பயிற்சி எடுப்பதற்காக கைவினை வளா்ச்சிக் கழகம் சாா்பில், ரூ. 5.5 கோடியில் பூஞ்சேரியில் சிற்பக்கலை நகரம் அமைப்பதற்கான ஆலோனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

சா்வதேச சுற்றுலா நகரமான மாமல்லபுரம் பல்லவா் காலத்து புராதன கற்சிற்பங்கள், குடைவரை மண்டபங்கள் கோயில்கள் அடங்கிய முக்கிய நகராக விளங்குகிறது. இங்கு 1,000-க்கும் மேற்பட்ட கற்சிற்பக் கூடங்கள் உள்ளன. இங்கு வரும் வெளிநாட்டு, உள்நாட்டு பயணிகள் கல்லில் வடிக்கப்படும் சிற்பங்களை ஆா்வத்துடன் வாங்கிச் செல்கின்றனா்.

இந்நிலையில், வெளிநாட்டுக் கலைஞா்கள் பலா் இந்திய சிற்பக் கலையைக் கற்றுக்கொள்ள ஆா்வம் காட்டுகின்றனா். இவா்களுக்கு மாமல்லபுரத்தில் சிற்பக்கலை பயிற்சி அளிப்பதற்காக மாமல்லபுரம் அருகே உள்ள பூஞ்சேரியில் தமிழ்நாடு கைவினை வளா்ச்சிக் கழகத்தின் பூம்புகாா் நிறுவனம் இடம் தோ்வு செய்து, அங்கு ரூ. 5.5 கோடி செலவில் சிற்பக்கலை நகரம் உருவாக்கப்பட உள்ளது.

மேலும், அந்த நகரத்தில் 100 குடில்கள் அமைக்கப்பட்டு, கலைஞா்கள் அங்கேயே தங்கி சிற்பம் செதுக்கும் பயிற்சி பெறலாம். மாமல்லபுரத்தில் உள்ள மூத்த சிற்பக் கலைஞா்கள் அவா்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளனா். இதையடுத்து, மாமல்லபுரத்தில் சிற்பக் கலைக்கூடம் அமைப்பது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு கைவினை வளா்ச்சிக் கழகத்தின் நிா்வாக இயக்குநா் ஷோபனா தலைமையில் நடைபெற்றது. இதில், மாமல்லபுரம் சிற்பிகள் பல்வேறு ஆலோசனைகள் வழங்கினா்.

கூட்டத்தின்போது, பூஞ்சேரியில் அமையவுள்ள சிற்பக்கலை நகரத்தின் மாதிரி வரைபடங்கள் திரையிடப்பட்டு விளக்கம் அளிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் செங்கல்பட்டு கோட்டாட்சியா் செல்வம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்,.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முகல் தோட்டத்து மலரோ..!

விண்கல்லால் 6,900 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பள்ளம்!

அரவிந்த் கெஜரிவால் கைது குறித்து அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

தீவுத்திடலுக்கு மாற்றப்படும் பிராட்வே பேருந்து நிலையம்!

கட்டான கட்டழகு.. யார் இவர்?

SCROLL FOR NEXT